ஆண்டவனுடைய 'அனந்த-கல்யாண-குணங்களை', அதாவது, அவனுடைய எல்லையற்ற பண்புகளை, பற்பலவிதமாக எடுத்துரைத்துக் களிப்பதே விஷ்ணு சஹஸ்ரநாமத்திலுள்ள 1008 பெயர்களைக் கொண்ட தோத்திரம். ஒவ்வொரு பெயரும் ஏதாவது ஒரு நற்குணத்தைக் காட்டும். சில பெயர்கள் அக்குணம் இருப்பதாலேயே தோன்றக்கூடிய அல்லது தோன்றிய பெயர்கள். இப்பெயர்களின் முழு உட்கருத்தையும் புரிந்துகொள்வதற்கு, ஏதாவதொரு பரம்பரை வழி வந்த வேதாந்த நுணுக்கங்கள் சில நமக்குத் தெரிதல் வேண்டியிருக்கலாம். உண்மையில் ஆண்டவன் எல்லை இல்லா ஆனந்தப் பெருங்கடல் அதனால் எந்தப் பெயர் கொண்டும் அவனை அழைக்கலாம். இவ்வாயிரம் பெயர்களை ஒருவன் வாயினால் பாடி மனத்தினால் சிந்திக்கும் வண்ணமே அதனுடைய ஆழ்கருத்துகளில் திளைத்து இச்சுவை தவிர வேறு எச்சுவையும் வேண்டேன் என்று சொல்லக்கூடிய பக்குவம் கிடைத்துவிடும் என்பது சான்றோர்களின் நம்பிக்கை.நாமங்களை உச்சரிப்பது புண்ணிய நதிகளில் நீராடுவதைவிடவோ, பிராயச்சித்த கருமங்கள் செய்வதை விடவோ உயர்ந்தது, ஏனென்றால், அவையெல்லாம் பாவங்களை போக்குகின்றன என்பதுதான் மதநூல்களின் தீர்மானம்; ஆனால் நாமங்களை உச்சரிப்பதால், பாவம் புரியத் தூண்டும் எண்ண ஓட்டங்களே கட்டுப்படும் என்பது நாம உச்சரிப்பின் பெருமை.
எல்லையற்றவனுக்கு ஆயிரம் நாமம் போதுமா

No comments :
Post a Comment