Sunday, 8 December 2019

ஸ்ரீஸாயி சரித்திரம் - அத்யாயம் 5 - பகுதி 6

No comments


இக்கதையின் முழு விவரம்:-
தாணேவைச் சேர்ந்த திரு B.V.தேவ் என்னும் ஓய்வுபெற்ற மம்லத்தார், ஸாயிபாபாவின் ஒரு பெரிய பக்தர். இவர் இந்த விஷயத்தைப் பற்றி ஸகுண்மேரு நாயக், கோவிந்த் கமலாகர் தீக்ஷித் இவர்களிடமிருந்து விசாரித்து பாதுகைகளைக் கொண்ட ஒரு கட்டுரை ஸாயி லீலா தொகுப்பு II எண், 1-ல், 25-ஆம் பக்கத்தில் பதிப்பித்துள்ளார். அது கீழ்கண்டவாறு:
      
1834 சக (1912 A.D.) யில் பம்பாயைச் சேர்ந்த டாக்டர் ராமராவ் கோதாரி. ஒரு தடவை ஷீர்டிக்கு பாபாவின் தரிசனத்துக்கு வந்தார். அவரது கம்பவுண்டரும், அவரது நண்பர் பாயி கிருஷ்ணாஜி அலிபாக்கரும் அவருடன் வந்தார்கள். கம்பவுண்டரும், பாயியும், ஸகுண்மேரு நாயக் உடனும் கோவிந்த் கமலாக்கர் தீக்ஷித் உடனும் நெருங்கிய நண்பர்களானர்கள். சில விஷயங்களைப் பற்றி இவர்கள் பேசிக் கொண்டிருக்கையில், சீர்டிக்கு ஸாயிபாபா முதல் விஜயம் செய்தது. புனித மரத்தடியில் அமர்ந்திருந்தது. இவ்வுண்மைகளின் ஞாபகார்த்தம் ஒன்று இருக்க வேண்டும்என்று நினைத்தார்கள். பாபாவின் பாதுகைகளைப் பிரதிஷ்டை செய்வதற்கு எண்ணி, அவற்றைச் சாதாரணக் கல்லில் செய்வதற்கு இருந்தன அப்போது பாயியின் நண்பரான கம்பவுண்டர் தனது எஜமானரான டாக்டர் ராமராவ் கோதரியிடம் இதைத் தெரிவித்தால், இதற்காக அருமையான பாதுகைகளை அவர் தயாரிப்பார் என்று யோசனை கூறினார். அனைவரும் இந்த யோசனையை விரும்பினார். டாக்டர் கோதாரியிடம் இதைப் பற்றித் தெரிவிக்கப்பட்டது. அவரும் சீர்டிக்கு வந்து பாதுகைகளின் திட்டத்தை வரைந்தார். கண்டோபா கோயிலில் உள்ள உபாசினி மஹாராஜிடம் அவர் சென்று தனது திட்டத்தைக் காண்பித்தார். உபாசினி அதில் பல முன்னேற்றத் திருத்தங்கள்  செய்து தாமரைப் புஷ்பங்கள், சங்கு, சக்கரம், மனிதன், முதலியவற்றை வரைந்து, வேப்ப மரத்தின் உயர்வைப் பற்றியும், பாபாவின் யோக சக்தியைப் பற்றியும் உள்ள பின்வரும் ஸலோகத்தை அதில் பொறிக்கலாம் என்று யோசனை கூறினார்.
அந்த ஸ்லோகம் பின்வருமாறு:

"ஸதா நிம்பவ்ருக்ஷஸ்ய மூலாதிவாஸாத்
ஸுதாஸ்த்ராவிணம் திக்தமப்யப்ரிதயம்
தரும் கல்பவ்ருக்ஷாதிகம்  ஸாதயந்தம்
நமாமீஷ்வரம் சத்குரும் ஸாயிநாதம்"

(நான் சாயிநாத் பிரபுவை வணங்குகிறேன்.  வேப்பமரம் கசப்பாகவும், இனிமையற்றதாகவும் இருப்பினும் அவரது நிரந்தர இருக்கையினால் அமிர்தத்தைக் கசிகிறது.  கல்ப விருக்ஷத்தைவிடச் சிறந்தது.  (அம்மரத்தின் கசிவு, அமிர்தம் என்று அதன் குணப்படுத்தும் தன்மையால் அழைக்கப்படுகிறது)

உபாஸனியின்  யோசனைகளை ஏற்றுக்கொள்ளப்பட்டு நிறைவேற்றப்பட்டன.  பாதுகைகள் பம்பாயில் செய்யப்பட்டு ஷீர்டிக்கு கம்பவுண்டர் மூலம் அனுப்பப்பட்டன.  பாபா அவற்றை, ஆவணி மாத பௌர்ணமி தினத்தன்று ப்ரதிஷ்டை செய்யவேண்டும் என்று சொன்னார்.  அத்தினத்தன்று காலை 11:30 மணிக்கு பாதுகைகளை கண்டோபா கோவிலிருந்து த்வாரகாமாயிக்கு (மசூதி) G.K.தீஷித் ஊர்வலமாகத் தனது தலையில் எடுத்து வந்தார். பாபா அப்பாதுகைகளைத் தொட்டு, இவைகள் பிரபுவின் பாதங்கள் என்றும், அவற்றை வேப்பமரத்தடியில் ப்ரதிஷ்டை செய்யும்படியும் கூறினார். அதற்கு முதல்நாள் பஸ்தா சேட் என்ற பம்பாயைச் சேர்ந்த பார்சி பக்தர் ரூ.25 மணியார்டர் செய்திருந்தார்.  பாபா இத்தொகையைப் ப்ரதிஷ்டை செய்யக் கொடுத்துவிட்டார்.  ப்ரதிஷ்டையின் மொத்தச் செலவு  ரூ.100 ஆகியது.  அதில் ரூ.75 நன்கொடைகளினால் சேர்க்கப்பட்டது.  முதல் ஐந்து ஆண்டுகள் G.K.தீஷித் அவர்களால் பாதுகைகள் வழிபாடு செய்யப்பட்டது.  பின்னர் இவ்வழிபாடு ஜக்கடியைச் சேர்ந்த லக்ஷ்மண் காகேஷ்வரால் செய்யப்பட்டது.  முதல் ஐந்து ஆண்டுகளில் டாக்டர் கோதாரி விளக்கேற்றுவதற்காக, மாதம் ரூ.2 அனுப்பி வைத்தார்.  பாதுகைகளைச் சுற்றிப் போடுவதற்கு வேலியும் அனுப்பினார்.  ஸ்டேஷனிலிருந்து அவ்வேலியை ஷீர்டிக்குக் கொண்டுவரும் செலவையும் (ரூ.7-8-0) கூரையும் சகுண் மேரு நாயக்கினால் கொடுக்கப்பட்டது.  தற்போது ஜாகடி (நாநாபூஜாரி) வழிபாட்டைச் செய்கிறார்.  சகுண் மேரு நாயக் நைவேத்யம், மாலை விளக்கேற்றுதல் முதலியவைகளைச் செய்கிறார்.

பாயி கிருஷ்ணாஜி என்பவர் முதலில் அக்கல்கோட் மஹராஜின் அடியவராவார்.  சகவருடம் 1834ல் பாதுகைகள் ப்ரதிஷ்டை செய்யப்படும் சமயத்தில் அக்கல்கோட் போகும் வழியில் ஷீர்டிக்கு வந்தார்.  பாபாவின் தரிசனம் ஆனபிறகு அக்கல்கோட்டுக்குப் போகவிரும்பி பாபாவின் அனுமதியை இதற்காக வேண்டினார்.  பாபா அவரிடம், "அக்கல்கோட்டில் என்ன இருக்கிறது, நீ ஏன் அங்கு போகவேண்டும்?  அக்கல்கோட் மஹராஜ் இங்கேயே (என்னுடன் ஒன்றி) இருக்கிறார்!", என்றார்.  இதைக்கேட்டு பாயி அக்கல்கோட் செல்லவில்லை, பாதுகைகளின் ப்ரதிஷ்டைக்குப் பின் ஷீர்டிக்கு அடிக்கடி வந்தார்.

ஹேமத்பந்திற்கு இவ்விபரங்கள் தெரியாதென்று B.V.தேவ் முடிக்கிறார்.  அவர் அங்ஙனம் அறிந்திருப்பாராயின் அதைத் தன்னுடைய சத்சரிதத்தில் சேர்க்கத் தவறியிருக்கமாட்டார்.  


ஸ்ரீ ஸாயியைப்  பணிக அனைவருக்கும் சாந்தி நிலவட்டும்.

                                                                                                                                                         (தொடரும்…)

Wednesday, 4 December 2019

ஸ்ரீஸாயி சரித்திரம் - அத்யாயம் 5 - பகுதி 5

No comments

வேப்பமரத்தடியில் உள்ள பாதுகைகளின் கதை

பாயி கிருஷ்ணாஜி அலிபாகர் என்பவர் அக்கல்கோட் மஹாராஜின் அடியவர் .அக்கல்கோட் மஹாராஜின் உருவப் படத்தை வழிப்பட்டார். அவர் ஒருமுறை அக்கல்கோட்டிற்கு (ஷோலாப்பூர் ஜில்லா) சென்று மஹாராஜின் பாதுகைகளைத் தரிசனம் செய்து கொண்டு, தன்னுடைய நேர்மையான வழிபாட்டைச் செலுத்திவர நினைத்தார். அவர் அங்கு செல்வதற்கு முன் கனவில் ஒரு காட்சியைக் கண்டார். அக்காட்சியில் அக்கல்கோட் மஹராஜ் தோன்றி அவரிடம் இப்போது சீர்டியே எனது இருப்பிடம் .அங்கு சென்று உனது வழிபாடுகளைச் செலுத்து” என்றார். எனவே பாயி தனது திட்டத்தை மாற்றிக் கொண்டு சீர்டிக்கு வந்து பாபாவை வழிபட்டு ,ஆறுமாதங்கள் அங்கு தங்கி ,மகிழ்ச்சியடைந்தார். அவருடைய காட்சி முதலியவற்றின் ஞாபகார்த்தமாக அவர் பாதுகைகளைத் தயாரித்து சிரவண சாகா 1834 (1912 A.D) ஆகிய புனிததினத்தன்று அவற்றை தாதா கேள்கர், உபாசினி முதலியோரால் நடத்தப்பட்ட, உரிய சடங்கு சம்பிரதாயங்களுடன் வேப்ப மரத்தடியில் பிரதிஷ்டை செய்தார். அதன் வழிபாட்டுக்கு ஓர் அந்தணர்  நியமிக்கப்பட்டார். அதனுடைய  நிர்வாகம் ஸகுண் மேரு நாயக் என்ற அடியவரிடம் ஒப்புவிக்கப்பட்டது.


ஸ்ரீ ஸாயியைப்  பணிக அனைவருக்கும் சாந்தி நிலவட்டும்.

                                                                                                                                                         (தொடரும்…)

Monday, 2 December 2019

ஸ்ரீஸாயி சரித்திரம் - அத்யாயம் 5 - பகுதி 4

No comments


பாபாவின் உடையும் அன்றாட நிகழ்ச்சி நியதியும்

ஸாயிபாபா தமது பருவத்தில் தமது தலையில் முடி வளர்த்தார். தமது தலை முடியை ஒழுங்குபடுத்துவதே இல்லை. விளையாட்டு வீரனைப் போன்று அவர் உடையணிந்திருந்தார். அவர் ராஹாதாவிற்கு சென்றிருந்தபோது ஜெந்து, ஜாய், ஜூய் ஆகியவற்றின் சிறிய புஷ்பங்களைக் கொணர்ந்து, தரையைச் சுத்தப்படுத்தி, காய்ந்த நிலத்தைக் கொத்தி அவற்றைப் பயிர் செய்து தண்ணீர் வீட்டார். வாமன் தாத்யா என்னும் ஓர் அடியவர் அவருக்குத் தினந்தோறும் இரண்டு பானைகள் கொடுத்தார். இவற்றை கொண்டு பாபா தமது செடிகளுக்குத் தண்ணீர் விடுவது வழக்கம். கிணற்றிலிருந்து நீர் இறைத்து மட்குடங்களை தாமே தோலில் தூக்கிச் செல்வார். மாலை நேரங்களில் மண்பானைகள் வேப்பமரத்தடியில் வைக்கப்பட்டிருக்கும். அவை வெறும் பச்சை மண்ணில் செய்யப்பட்டு சுடப்படாத காரணத்தால் அங்ஙனம் வைக்கப்பட உடனையே உடைந்து விடும். அடுத்தநாள் தாத்யா வேறு இரண்டு புதுப்பானைகள் கொடுப்பார். இந்நிகழ்ச்சி மூன்று ஆண்டுகள் நடந்தது. ஸாயிபாபாவின் கடினப்பயிற்சி ,உழைப்பு ஆகியவற்றினால் ஒரு பூந்தோட்டம் வளர்ந்தது. இந்த நிலத்தில் தற்போது ‘பாபாவின் சமாதி மந்திர் என்னும் ஓர் பெரிய மாளிகை இருக்கிறது. தற்போது பாபாவின் சமாதி மந்திர் பல பக்தர்களால் அடிக்கடி விஜயம் செய்யப்பட்டு புழங்கப்பட்டு வருகிறது.

ஸ்ரீ ஸாயியைப்  பணிக அனைவருக்கும் சாந்தி நிலவட்டும்.

                                                                                                                                                                           (தொடரும்)