வேப்பமரத்தடியில் உள்ள பாதுகைகளின்
கதை
பாயி கிருஷ்ணாஜி அலிபாகர் என்பவர் அக்கல்கோட் மஹாராஜின் அடியவர் .அக்கல்கோட்
மஹாராஜின் உருவப் படத்தை வழிப்பட்டார். அவர் ஒருமுறை அக்கல்கோட்டிற்கு (ஷோலாப்பூர்
ஜில்லா) சென்று மஹாராஜின் பாதுகைகளைத் தரிசனம் செய்து கொண்டு, தன்னுடைய நேர்மையான வழிபாட்டைச்
செலுத்திவர நினைத்தார். அவர் அங்கு செல்வதற்கு முன் கனவில் ஒரு காட்சியைக் கண்டார்.
அக்காட்சியில் அக்கல்கோட் மஹராஜ் தோன்றி அவரிடம் ”இப்போது சீர்டியே எனது இருப்பிடம்
.அங்கு சென்று உனது வழிபாடுகளைச் செலுத்து” என்றார். எனவே பாயி தனது திட்டத்தை
மாற்றிக் கொண்டு சீர்டிக்கு வந்து பாபாவை வழிபட்டு ,ஆறுமாதங்கள் அங்கு தங்கி ,மகிழ்ச்சியடைந்தார்.
அவருடைய காட்சி முதலியவற்றின் ஞாபகார்த்தமாக அவர் பாதுகைகளைத் தயாரித்து சிரவண சாகா
1834 (1912 A.D) ஆகிய புனிததினத்தன்று அவற்றை தாதா
கேள்கர், உபாசினி முதலியோரால் நடத்தப்பட்ட, உரிய சடங்கு சம்பிரதாயங்களுடன் வேப்ப மரத்தடியில்
பிரதிஷ்டை செய்தார். அதன் வழிபாட்டுக்கு ஓர் அந்தணர் நியமிக்கப்பட்டார். அதனுடைய நிர்வாகம் ஸகுண் மேரு நாயக் என்ற அடியவரிடம்
ஒப்புவிக்கப்பட்டது.
ஸ்ரீ ஸாயியைப் பணிக அனைவருக்கும் சாந்தி நிலவட்டும்.
(தொடரும்…)

No comments :
Post a Comment