Monday, 2 December 2019

ஸ்ரீஸாயி சரித்திரம் - அத்யாயம் 5 - பகுதி 4

No comments


பாபாவின் உடையும் அன்றாட நிகழ்ச்சி நியதியும்

ஸாயிபாபா தமது பருவத்தில் தமது தலையில் முடி வளர்த்தார். தமது தலை முடியை ஒழுங்குபடுத்துவதே இல்லை. விளையாட்டு வீரனைப் போன்று அவர் உடையணிந்திருந்தார். அவர் ராஹாதாவிற்கு சென்றிருந்தபோது ஜெந்து, ஜாய், ஜூய் ஆகியவற்றின் சிறிய புஷ்பங்களைக் கொணர்ந்து, தரையைச் சுத்தப்படுத்தி, காய்ந்த நிலத்தைக் கொத்தி அவற்றைப் பயிர் செய்து தண்ணீர் வீட்டார். வாமன் தாத்யா என்னும் ஓர் அடியவர் அவருக்குத் தினந்தோறும் இரண்டு பானைகள் கொடுத்தார். இவற்றை கொண்டு பாபா தமது செடிகளுக்குத் தண்ணீர் விடுவது வழக்கம். கிணற்றிலிருந்து நீர் இறைத்து மட்குடங்களை தாமே தோலில் தூக்கிச் செல்வார். மாலை நேரங்களில் மண்பானைகள் வேப்பமரத்தடியில் வைக்கப்பட்டிருக்கும். அவை வெறும் பச்சை மண்ணில் செய்யப்பட்டு சுடப்படாத காரணத்தால் அங்ஙனம் வைக்கப்பட உடனையே உடைந்து விடும். அடுத்தநாள் தாத்யா வேறு இரண்டு புதுப்பானைகள் கொடுப்பார். இந்நிகழ்ச்சி மூன்று ஆண்டுகள் நடந்தது. ஸாயிபாபாவின் கடினப்பயிற்சி ,உழைப்பு ஆகியவற்றினால் ஒரு பூந்தோட்டம் வளர்ந்தது. இந்த நிலத்தில் தற்போது ‘பாபாவின் சமாதி மந்திர் என்னும் ஓர் பெரிய மாளிகை இருக்கிறது. தற்போது பாபாவின் சமாதி மந்திர் பல பக்தர்களால் அடிக்கடி விஜயம் செய்யப்பட்டு புழங்கப்பட்டு வருகிறது.

ஸ்ரீ ஸாயியைப்  பணிக அனைவருக்கும் சாந்தி நிலவட்டும்.

                                                                                                                                                                           (தொடரும்)

No comments :

Post a Comment