Monday, 22 July 2019

ஸ்ரீஸாயி சரித்திரம் - அத்யாயம் 4 - பகுதி 2

No comments

கெளலிபுவாவின் கருத்து


கெளலிபுவாவின் பிரகடனம்
    
ஏறக்குறைய தொண்ணூற்றைந்து வயதுடைய கெளலிபுவா என்னும் ஒரு பக்தர் பண்டரீபுரத்துக்கு வருடந்தோறும் சென்று வருபவர். அவர் பண்டரீபுரத்தில் எட்டு மாதங்கள் தங்கினார். கங்கைக்கரையில் (ஜூலை முதல் நவம்பர் வரை) அஷாட மாதத்திலிருந்து கார்த்திகை வரை நான்கு மாதங்கள் தங்கினார். மூட்டைகளைச் சுமப்பதற்காக ஒரு கழுதையைத் தன்னுடனும் ஒரு சீடனைத் துணைவனாகவும் வைத்திருந்தார். ஒவ்வோர் ஆண்டும் தனது பண்டரீபுர விஜயத்தைச் செய்துவிட்டு சீர்டிக்கு, தான் மிகவும் அன்பு செலுத்திய ஸாயிபாபாவைப் பார்க்க வருவார். அவர் பாபவை உற்றுநோக்கி இவ்வாறாகக் கூறுவது வழக்கம்:”இவரே ஏழைகளிடத்தும் ,தீனர்களிடத்தும் கருணை காட்டும் கடவுளான பண்டரிநாத விட்டலின் அவதாரமானார்”. கெளலிபுவா, விட்டலின் முதிய அடியவர். பண்டரிக்கு அநேக முறை விஜயம் செய்தார். ஸாயிபாபா பண்டரிநாதரே என்பதைப் பிரகடனம் செய்தார்.


ஸ்ரீ ஸாயியைப்  பணிக அனைவருக்கும் சாந்தி நிலவட்டும்.

                                                                   (தொடரும்...)

                                              



No comments :

Post a Comment