விட்டல் தாமே தோன்றினார்
இறைவனது நாமத்தை நினைத்துக்
கொண்டிருத்தலிலும் ,பாடுதலிலும் ஸாயிபாபா மிகவும் விருப்பமுள்ளவர். அவர் எப்போதும்
“அல்லா மாலிக்” (இறைவனே எஜமானன்) மற்றும்
தமது ,முன்னிலையில் மற்றவர்களை கடவுளது நாமத்தை
இரவும் ,பகலும் தொடர்ந்து ஏழு நாட்கள் பாடும்படி செய்தார்.இதற்கு நாம ஸப்தம் என்று
பெயர்.
ஒருமுறை அவர் தாஸ்கணு மஹாராஜை நாம ஸப்தம் செய்யும் படி சொன்னார். ஏழாவது நாளின் முடிவில் விட்டல் பிரசன்னமாவதற்கு
உறுதியளித்தால் தான் அதைச் செய்வதாக அவர் கூறினார். அதற்கு பாபா தமது நெஞ்சின் மேல்
கையை வைத்து ”நிச்சயம் பிரசன்னம் ஆவார் என உறுதியளித்து, ஆனால் அந்த பக்தன் ஊக்கமுடையவனாகவும், பக்தியுடையவனாகவும் இருக்க வேண்டும்” என்று கூறினார்.
டாகூர்நாத்தின் டங்கபுரி
(தகூர்), விட்டலின் பண்டரி, ரண்சோடின் (கிருஷ்ணனின்)துவாரகஎல்லாம்இங்கே(சீர்டியில்) இருக்கின்றன. துவாரகையைப் பார்க்க எவரும் வெகுதூரம் செல்ல வேண்டியதில்லை. இவ்வாறாக
அன்பாலும், பக்தியாலும் பக்தன் பொங்கிக் கொண்டிருக்கும் போதுதான் விட்டல் தாமே இங்கு
(சீர்டியில்) பிரசன்னமாவார். ஸப்தம் பூர்த்தியானதும் விட்டல் கீழ்கண்ட விதமாகப் பிரச்சன்னமாகவே
செய்தார். வழக்கம் போல குளித்து முடித்தபின் காகாஸாஹேப் தீக்ஷித் தியானத்தில் அமர்ந்திருந்தார்.
அவர் ஒரு காட்சியில் விட்டலைக் கண்டார். மத்தியானம் பாபாவின் தரிசனத்துக்காகச் சென்றபோது
பாபா ஐயமற அவரை நோக்கி, “விட்டல் பாடீல் வந்தாரா? நீர் அவரைக் கண்டீரா? அவர் விளையாட்டுப்
பிள்ளை போன்றவர். அவரை உறுதியாகப் பற்றிக்
கொள்ளும். இல்லாவிடில் நீர் சிறிதே கவனக் குறைவாக இருப்பினும் தப்பித்துவிடுவார்” எனக்
கூறினார். இது காலையில் நிகழ்ந்தது.
மத்தியானம் மற்றொரு விட்டல்
தரிசனம். வெளியிலிருந்து ஒரு ஹாக்கர் 25 அல்லது 30 விட்டோபா படங்களை விற்றுக்கொண்டு வந்தான். காகாஸாஹேபின் காட்சியில்
தோன்றிய உருவத்துடன் அப்படம் ஒத்து இருந்தது. இதைக் கண்டும், பாபாவின் மொழிகளை நினைவு
கூர்ந்தும், காகாஸாஹேப் தீக்ஷித் ஆச்சரியப்பட்டு மகிழ்ச்சியுற்றார். ஒரு படத்தை வாங்கித்
தனது பூஜை அறையில் வழிபாட்டுக்காக வைத்தார்.
ஸ்ரீஸாயியைப் பணிக அனைவருக்கும் சாந்தி நிலவட்டும்


No comments :
Post a Comment