பகவந்த்ராவ் க்ஷீர்ஸாகரின் கதை
பகவந்த்ராவ் க்ஷீர்ஸாகரின் கதை, பாபா விட்டல் வழிபாட்டில் எவ்வளவு ஆர்வமுள்ளவராக இருந்தார் என்பதை எடுத்துக் காட்டுகிறது. பகவந்த்ராவின் தந்தையார் விட்டோபாவின் பக்தர். பண்டரீபுரத்துக்கு வருடாந்திரப் பயணம் செய்யும் பழக்கமுடையவர். தமது வீட்டிலும் விட்டோபாவின் உருவம் வைத்து அவர் வழிபட்டார். அவர் இறந்த பின் அவரது மகன் வருடாந்திரப் பயணம், வழிபாடு , சிரார்த்தம் முதலியவை அனைத்தையும் நிறுத்திவிட்டார். பகவந்த்ராவ் சீர்டிக்கு வந்தபோது, பாபா அவரது தந்தையை நினைவு கூர்ந்து கூறியதாவது “அவரது தந்தை எனது சினேகிதன். எனவே நான் அவரை இங்கு இழுத்தேன். அவர் நைவேத்யம் படைக்கவே இல்லை அதலால் அவர் விட்டலையும் என்னையும் பட்டினி போட்டார். எனவே அவரை நான் இங்கு கொணர்ந்தேன். அவருடன் வாதாடி வழிபாடு செய்ய வைப்பேன்”.
ஸ்ரீ ஸாயியைப் பணிக அனைவருக்கும் சாந்தி நிலவட்டும்.
(தொடரும்...)

No comments :
Post a Comment