Thursday, 1 August 2019

ஸ்ரீஸாயி சரித்திரம் - அத்யாயம் 4 - பகுதி 6

No comments

ஸாயிபாபாவின் அயோனி ஜன்மமும் அவரின் முதல் சீர்டி விஜயமும்



ஸாயிபாபாவின் பெற்றோர், பிறந்த இடம் இவற்றைப் பற்றி ஒருவருக்கும் தெரியாது. பல விசாரணைகள் செய்யப்பட்டன. பாபாவிடமும் மற்றவர்களிடமும் பல கேள்விகள் கேட்கப்பட்டன. ஆனால் திருப்தியான பதிலோ செய்திகளோ இதுவரை  கிடைக்கவில்லை. வழக்கத்தில் இவைகளைப் பற்றி நமக்கு ஒன்றும் தெரியாது. சாதாரண மனிதர்களையொப்ப நாமதேவர், கபீர் முதலியோர் பிறக்கவில்லை. அவர்கள் சிசுக்களாக ,முத்துக்களின் தாயினிடத்தில் (ஆற்றில்) காணப்பட்டார்கள். நாமதேவ் கோணாயியால் பீமரதி ஆற்றிலும் கபீர், தமால் என்பவரால்  பாகீரதி ஆற்றிலும் கண்டெடுக்கப்பட்டார்கள். ஸாயிபாபாவின் விஷயமும் அதையொத்ததாகும். பக்தர்களுக்காக ஒரு வேப்ப மரத்தடியில் 16 வயது இளைஞனாகத் தாமே முதலில் தோன்றினார். அப்போதே பிரம்ம ஞானத்தால் நிரம்பியவராகக் காணப்பட்டார். கனவிலும் இவ்வுலகப் பொருள்களின் ஆசை அவருக்கு இல்லை. மாயையை அவர் உதைத்து தள்ளினார். முக்தி அவர் தம் காலடியில் பணி செய்தது. சீரடியைச் சேர்ந்தவரும் நாநாசோப்தாரின் தாயாருமாகிய ஒரு பாட்டி அவரைக் கீழ்கண்டவிதமாக வர்ணிக்கிறார். அழகும், சுறுசுறுப்பும், மிகுந்த சுந்தரமும் உடைய இவ்விளைஞன் முதலில் வேப்ப மரத்தின் அடியில் ஆசனத்தில் அமர்ந்திருந்தவாறு காணப்பட்டார். அக்கிராமத்து மக்கள், இத்தகைய இளம் வயது உடையபவன் வெப்பத்தையோ குளிரையோ பொருட்படுத்தாது அத்தகைய கடினப் பயிற்சி பழகுவதைக் கண்ணுற்ற ஆச்சரியத்தால் தாக்கப்பட்டனர். பகலில் ஒருவருடனும் பழகுவதில்லை .இரவில் ஒருவருக்கும் அஞ்சுவதில்லை. இவ்விளைஞன் எங்கிருந்து வந்தான் என்று மக்கள் ஆச்சர்யப்பட்டுக் கேட்டுக் கொண்டனர். ஒரு சாதாரண கவனிப்பே, அவன்மீது எல்லோரும் அன்பு கொள்ளும் அளவிற்கு அவனுடைய உருவாம்சங்களெல்லாம் அத்தகைய சுந்தரம் பொருந்தியதாக இருந்தது. அவன் ஒருவர் வீட்டிற்கும் செல்வதில்லை. எப்போதும் வேப்பமரத்தடியிலேயே  உட்கார்ந்திருந்தான். வெளிதோற்றத்திற்கு இளைஞனாகக் காணப்பட்டான். ஆயினும் அவன் செய்கைகள் அவன் உண்மையிலேயே ஒரு “பரமாத்மா” என்பதை வெளியிட்டன. .அவன் வேண்டுதல் வேண்டாமை – யின்மையின் பருப் பொருளாகவும் அனைவருக்கும் ஓர் மர்மமாகவும் இருந்தான் .ஒருநாள் கண்டோபா கடவுள் ஒரு அடியவனிடம் ’சாமி’ பிடித்தது. ஜனங்கள் அவரை, ‘தெய்வமே இவ்விளைஞனின் தந்தை யார்?அவன் எப்போது வந்தான் என்பதை நீர் தயவு செய்து விசாரியும் எனக் கேட்கத் துவங்கினர். கண்டோபா அவர்களை ஒரு மண் வெட்டி கொணரச் சொல்லி ஒரு குறிப்பிட்ட இடத்தை தோண்டச் சொன்னார். அங்ஙனமே தோண்டப்பட்ட போது செங்கற்கள் காணப்பட்டன. அதற்கடியில் சமதளகல் ஒன்றும் இருந்தது. இந்தக்கல் அப்புறப்படுத்தப்பட்டதும்  ஒரு நிலைக் கதவு தெரிந்தது. அதில்  நான்கு சமயி(விளக்குகள்) எரிந்து கொண்டிருந்தன. அது ஒரு நிலவறைக்கு அழைத்துச் சென்றன. அதில் பசுமுக உருவத்தில் ஜபம் செய்யும் பைகள், மரப்பலகைகள், ஜபமாலைகள் முதலியவை காணப்பட்டன . கண்டோபா கடவுள் கூறியதாவது, “இவ்விளைஞன் இங்கு 12 ஆண்டுகளாகப் பயிற்சி செய்தான்”, பிறகு ஜனங்கள் அவ்விளைஞனிடம் இதைப்பற்றி கேட்கத் துவங்கினர். அவன் அவர்களை திசைதிருப்பி ,அது தன்னுடைய குருவின் இடம் என்றும் அவருடைய புனிதமான ”வதன்“ என்றும் அதை நன்றாகப் பாதுகாக்கும் படியும் வேண்டிக் கொண்டான். ஜனங்கள் அப்போது கதவை முன்பிருந்தபடியே  மூடவிட்டனர். அரச மரமும், அத்தி மரமும் புனிதமாய் இருப்பது போல் பாபா வேப்ப மரத்தையும் அதே அளவில் புனிதமாகக் கருதி, அதையே பெரிதும் விரும்பினார். மஹால்ஸாபதியும் மற்ற அடியவர்களும் இவ்விடத்தை பாபாவின் குருநாதனர் சமாதியடைந்த இடமாகக் கருதி ஸாஷ்டாங்க சரணம் செய்தனர்.

ஸ்ரீ ஸாயியைப்  பணிக அனைவருக்கும் சாந்தி நிலவட்டும்.


(தொடரும்...)

No comments :

Post a Comment