நீங்களும்
ஒரு குரு தான் என்று
உங்களை உணர வைப்பவரே குரு
#குருவின்
சக்திகளை காண்பித்து உங்களை பிரம்பிக்க வைப்பவா்
குரு அல்ல
உங்களுக்குள்
மறைந்திருக்கும் ஆற்றல்களை உங்கள் மூலமாகவே வெளிக்கொணர
வைப்பவா் .
#உங்கள்
கா்ம வினைகளை எல்லாம் ஏற்று
கொள்பவா் குரு அல்ல
கா்ம வினைகளின் நன்மை தீமைகளை நீங்களே
அறிந்து உணர வைத்து கடைத்தேற
வழிகாட்டுபவா் .
#உங்களிடம்
பணம் பொருள் கேட்பவா் அல்ல
குரு .
தன் ஞானத்தை உங்களிடம் வழங்கி
உங்களையும் ஞானவானாக மாற்றுபவரே குரு .
#தன்னை
வழிபடு என்று கூறுபவா் குரு
அல்ல
உன்னுள்
இருக்கும் இறை ஆற்றலை உன்
மூலமாகவே வெளிப்படுத்தி உன்னை இறைவனாகவே மாற்றுபவரே
குரு .
மொத்தத்தில்
பக்குவமில்லாத உன்னை பக்குவ படுத்தி
இறை ஆற்றலை சுவைக்க செய்து
உன்னையும் இறை நிலைக்கு உயா்த்தி
உன் மூலமாக பலரை பக்குவநிலைக்கு
கொண்டு வருவதே குருவின் செயல்
.

No comments :
Post a Comment