கல்யாணக் கும்பல் சீர்டியை அடைந்ததும் கண்டோபா கோயிலுக்கு அருகிலுள்ள
ஓர் ஆலமரத்தடியில் வந்து தங்கினர். கண்டோபா கோயிலின் பரந்த வெளியில் வண்டிகள் அவிழ்ந்து விடப்பட்டன. கோஷ்டியில் உள்ளவர்கள் எல்லாம் ஒவ்வொருவராக இறங்கின .பக்கிரியும் கீழே இறங்கினார்.இளம் பக்கிரி
இறங்கிக் கொண்டிருப்பதை பகத் மஹால்ஸ்பதி கண்ணுற்றார். உடனே “யா ஸாயி”
(ஸாயி வர வேண்டும்) என்று அழைத்தார்கள். அதிலிருந்து அவர் “ஸாயிபாபா”
என்னும் பெயரால் அறியப்பட்டார்.
ஸ்ரீ ஸாயியைப் பணிக அனைவருக்கும் சாந்தி நிலவட்டும்.
(தொடரும்...)

No comments :
Post a Comment