Friday, 2 August 2019

ஸ்ரீஸாயி சரித்திரம் - அத்யாயம் 4 - பகுதி 7

No comments

மூன்று  வாடாக்கள்


வேப்பமரம் இருக்குமிடமும், அதைச் சுற்றியுள்ள இடமும் திரு.ஹரிவிநாயக் ஸாடே அவர்களால் வாங்கப்பட்டு “ஸாடே”யின் வாடா என்ற பெயரில் ஒரு பெரும் கட்டிடமும் எழுப்பப்பட்டது. அங்கு திரண்ட புனித யாத்ரீகர்களுக்கு அது ஒன்றே தங்கும் இடமாய் இருந்தது. ஒரு “பார்” (மேடை) வேப்பமரத்தைச் சுற்றிக் கட்டப்பட்டது. தங்கும் இடமும் படிக்கட்டுகளுடன் அமைக்கப்பட்டது. படிக்கட்டுகளின்  அடியில் ஒரு இருப்பிடம் இருக்கிறது. பக்தர்கள் அம்மேடையில் வடக்கு நோக்கி அமர்கிறார்கள். வியாழன் ,வெள்ளிக் கிழமை மாலை நேரங்களில் அங்கு வாசனைப் பொருள்களை எரிப்பவர்கள் கடவுள் கிருபையால் மகிழ்ச்சியுடன் இருப்பர். இந்த வாடா பழமையானது. உதிர்ந்து கொட்டும் தன்மை உடையதாகவும், பழுது பார்க்க வேண்டியதாகவும் இருந்தது. தற்போது தேவையுள்ள பழுது பார்க்க வேண்டியவைகள், சேர்க்க வேண்டியவைகள், மாறுபாடுகள் எல்லாம் ஸமஸ்தானத்தால் செய்யப்பட்டன (2) சில ஆண்டுகளுக்குப் பின் தீக்ஷித் என்ற பம்பாய் வக்கீல் இங்கிலாந்து சென்றிருந்தார். அங்கு நேரிட்ட ஒரு விபத்தில் தனது காலை முறித்துக் கொண்டார். இக்காயம் எந்த விதத்திலும் குணப்படும் வழியைக்  காணவில்லை .நானாஸாஹேப் சாந்தோர்கர், ஸாயிபாபாவிடம் முயற்சிக்கும்படி அறிவுறுத்தினார். எனவே அவர் 1909-இல் ஸாயிபாபாவைக் கண்டு தனது கால் ஊனத்தைவிட, தனது மன ஊனத்தை குணம் ஆக்கும்படி வேண்டிக் கொண்டார் ஸாயிபாபாவின் தரிசனத்தால் மகிழ்ச்சியுற்று சீர்டியிலேயே தங்கி விட முடிவு செய்தார். எனவே தனக்காகவும், அடியவர்களுக்காகவும் ஒரு வாடாவை எழுப்பினார். 10-12-1910 இல் அக்கட்டிடத்திற்கு அஸ்திவாரம் இடப்பட்டது. இந்த நாளில் மற்ற இரு முக்கிய சம்பவங்கள்  நிகழ்ந்தன.(1) திரு.தாதா ஸாஹேப் காபர்டே தனது வீடு திரும்புவதற்கு அனுமதி அளிக்கப்பட்டார்.(2) சாவடியில் இரவு ஆரத்தி தொடங்கியது. இந்த வாடா கட்டி முடிக்கப்பட்டு 1911-இல் ஸ்ரீ ராமநவமி தினத்தில் உரிய மரியாதைகளுடனும் ,சம்பிரதாயங்களுடனும் பிரவேசம் செய்யப்பட்டது.(3)நாக்பூரைச் சேர்ந்த புகழ்பெற்ற லட்சாதிபதியான திரு.புட்டி அவர்களால் மற்றொரு வாடா அல்லது அரண்மனை மாளிகையும் எழுப்பப்பட்டது. ஏராளமாக பணம் இக்கட்டிடத் திற்கு செலவிடப்பட்டது .ஏனெனில், ஸாயிபாபாவின் உடல் இவ்விடத்தில்தான் அடக்கம் செய்யப்பட்டு இருக்கிறது. இது தற்போது சமாதி கோயில் (சமாதி மந்திர்) என வழங்கப்படுகிறது. இவ்விடத்தில் முன்னர் பாபா தண்ணீர் விட்டு கவனித்து வந்த ஓர் தோட்டம் இருந்தது. முன்னர் ஒன்றுமே இல்லாத இடத்தில் மூன்று வாதாக்கள் எழுப்பின. இவை எல்லாவற்றிலும் ஆரம்ப காலத்தில் அனைவருக்கும் ஸாடேவின் வாடாவே நிரம்பப் பயன்பட்டது. வாமன் தாத்யாவின் உதவியுடன் ஸாயிபாபா கவனித்த தோட்டத்தின் கதை, ஸாயிபாபா சீர்டியில் தற்காலிகமாக இல்லாதிருந்து, சாந்த்பாடீலின் கல்யாண ஊர்வலத்துடன் மீண்டும் வருகை ,தேவீதாஸ் ,ஜானகிதாஸ், கங்காகீர் இவர்களின் பழக்கம், மொஹித்தின் தாம்போலியுடன் பாபாவின் மல்யுத்தப் போட்டி, மசூதியில் இருப்பிடம், திரு.டேங்க்லே மற்ற அடியவர்களின் அன்பு மற்ற விஷயங்களும் அடுத்த அத்தியாயத்தில் விவரிக்கப்படும்

ஸ்ரீஸாயியைப்  பணிக அனைவருக்கும் சாந்தி நிலவட்டும்.

(தொடரும்...)

No comments :

Post a Comment