மற்ற ஞானிகளுடன் தொடர்பு
ஸாயிபாபா மசூதியில் தங்கத் துவங்கினார். தேவிதாஸ் எனற ஓரு ஞானி பாபா
வருவதற்குப் பல ஆண்டுகளுக்கு முன்பே சீர்டியில் தங்கியிருந்தார். பாபா அவர்தம்
நட்பை விரும்பினார் அவருடன் மாருதி கோயிலிலும், சாவடியிலும் தங்கியிருந்தார். சில
சமயங்களில் தனியாகவும் இருந்தார். பிறகு ஜான்கிதாஸ் என்று மற்றொரு ஞானியும் வந்தார். பாபா அவருடன் பேசிக் கொண்டிருப்பதிலேயே பெரும்பாலான நேரத்தைக் கழித்தார் அன்றி ஜான்கிதாஸ் பாபா தங்கியிருந்த இடத்திற்குச்
செல்வார் அங்ஙனமே புண்தாம்பேயினின்று இல்லறத்திலிருந்து வைசிய ஞானியான கங்காகீர் எப்போதும் சீர்டிக்கு வந்தார். ஸாயிபாபா தம் இரு கைகளாலும் தண்ணீர் குடத்தைத் தோட்டத்திற்கு நீர் பாய்ச்சுவதற்காக எடுத்துச்
சென்ற போது முதன்முதலாக அவரைக் கண்ட கங்காகீர் ஆச்சரியப்
பட்டு வியந்து கூறியதாவது “சிர்டி ஆசிர்வதிக்கப்பட்டது.
அது மதிக்க முடியாத வைரத்தைப் பெற்றிருக்கிறது. இம்மனிதர் இன்று தண்ணீர் சுமந்து
கொண்டிருக்கிறார். ஆனாலும் அவர் சாதாரண மனிதர் அல்ல. இந்நிலம் (சீர்டி)
அதிர்ஷ்டமும் புண்ணியமும் உடைத்ததாலின் ௮ஃது ஓர் வைரத்தைப் பெற்றது” யேவலா மடத்தைச் சேர்ந்த ஆனந்த்நாத்
என்பவர் புகழ்பெற்ற ஞானியும், அக்கல்கோட் மஹாராஜின்
சீடரும் ஆவார். அவர் சீர்டி மக்கள் சிலருடன் சீர்டிக்கு
வந்திருந்தார். அவர் ஸாயிபாபாவைத் தம்முன் கண்டபோது வெளிப்படையாகப் பின்வருமாறு
கூறினார். "இது உண்மையில் விலைமதிக்க முடியாத இரத்தினமாகும். அவர் ஒரு சாதாரண மனிதர் போன்று தோன்றினாலும். அவர் ஒருசாதாரணக் கல்
அல்ல. ஒரு வைரக்கல், கூடிய விரைவில் நீங்கள் இதை
உணர்வீர்கள்". இதைக்கூறிய பின்னர் அவர் யேவலாவுக்குத் திரும்பிவிட்டார். இது ஸாயிபாபா இனளஞனாய் இருக்கும் போது சொல்லப்பட்டது.
ஸ்ரீ ஸாயியைப் பணிக அனைவருக்கும் சாந்தி நிலவட்டும்.
(தொடரும்...)

No comments :
Post a Comment