Monday, 27 February 2023

ஸ்ரீஸாயி சரித்திரம் - அத்யாயம் 9 - பகுதி 1

No comments

ஷீர்டி புனித யாத்திரையின் குணாதிசயம்

ஷீர்டி புனித யாத்திரையின் ஒரு சிறப்பான வினோதம் என்னவென்றால் எவரும் ஷீர்டியை விட்டு பாபாவின் அனுமதியின்றி அகன்று செல்லமுடியாது.  அப்படிச் செல்வாரேயானால், அவர் சொல்லற்கரிய தொல்லைகளை வரவேற்கிறார்.  ஆனால் எவரேனும் ஷீர்டியைவிட்டு  வெளியேறிச் செல்லும்படி பாபாவால் கேட்டுக்கொள்ளப்பட்டால் அவர் அங்கு அதற்குமேல் தங்கியிருக்கமுடியாது.  பக்தர்கள் பாபாவிடம் சென்று வந்தனம் செய்து விடைபெற்றுச் செல்லப்போகும்போது அவர் சில யோசனைகளை அல்லது குறிப்புக்கள் வழங்குவார்.  இந்த யோசனைகளை பின்பற்றப்பட வேண்டும்.  இவைகள் பின்பற்றப்படாவிட்டாலும் அல்லது விலக்கப்பட்டு இந்தாலும், அங்ஙனம் தூண்டுரைகளுக்கு மாறாக நடந்தவர்களுக்கு விபத்துக்கள் நேரிடுவது உறுதி.  

ஸ்ரீ ஸாயியைப்  பணிக அனைவருக்கும் சாந்தி நிலவட்டும்.

                                                                                                 (தொடரும்…)

No comments :

Post a Comment