Monday, 27 February 2023

ஸ்ரீஸாயி சரித்திரம் - அத்யாயம் 9 - பகுதி 2

No comments

தாத்யா கோதே பாடீல் 

தாத்யா கோதே பாடீல், ஒருமுறை கோபர்காவன் கடைவீதிக்குக் குதிரை வண்டியில் சென்று கொண்டிருந்தார்.  அவர் மசூதிக்கு அவசரமாகத் திரும்பிவந்து பாபாவை வணங்கி,தான் கோபர்காவன் கடைவீதிக்குச் செல்லப்போவதாகக் கூறினார்.  பாபாவோ, "அவசரப்படாதே.  சிறிது தாமதித்துக் கடைவீதிக்குச் செல், கிராமத்தை விட்டு வெளியே செல்லாதே" என்றார்.  ஆனால் போவதற்கு அவருடைய வேகத்தைக்கண்ட பாபா, ஷாமாவையாவது (மாதவராவ் தேஷ்பாண்டே) உடன் அழைத்துச் செல்லுமாறு கூறினார்.  இவ்வுத்தரவைப் பொருட்படுத்தாது தாத்யா கோதே, உடனே குதிரை வண்டியை ஓட்டிச் சென்றார்.  இரண்டு குதிரைகளில், ரூ.300 விலையுள்ள குதிரை மிகவும் சுறுசுறுப்பாகவும், இருப்புக்கொள்ளாமலும் இருந்தது.  ஸாவ்லிவிஹீர் கிராமத்தைத் தாண்டியபிறகு, அது தாறுமாறாக ஓடத் தொடங்கியது.  இடுப்பில் சுளுக்கு ஏற்பட்டுக் கீழே விழுந்துவிட்டது.  தாத்யா அதிகமாகக் காயப்படவில்லை.  ஆனால் சாயிபாபாவின் உத்தரவை நினைவிற்கொண்டார்.  மற்றொரு சந்தர்ப்பத்தில் கோல்ஹார் கிராமத்துக்குச் செல்லும்போது, பாபாவின் நெறிமுறையை மதிக்காமல் குதிரை வண்டியில் சென்றபோது அதுவும் இதே கதிக்கு இலக்காகியது.  

ஸ்ரீ ஸாயியைப்  பணிக அனைவருக்கும் சாந்தி நிலவட்டும்.
                                                                                                  (தொடரும்…)


No comments :

Post a Comment