மேகா:- மேகாவின் கதை முன்னாலேயே 28 ஆம் அத்தியாயத்தில் விளக்கப்பட்டு இருக்கிறது. மேகா இறந்தபின்பு கிராமத்தார் எல்லோரும் சவ ஊர்வலத்தில் கலந்துகொண்டனர். பாபாவும் அவர்களுடன் கூடச் சென்று மலர்களை மேகா உடல்மீது பொழிந்தார். சடங்குகள் செய்யப்பட்ட பிறகு சாதாரண மனிதர்களைப் போன்று பாபாவின் கண்களினின்றும் நீர் வழிந்தது. பெருந்துக்கத்தாலும், கவலையாலும் பீடிக்கப்பட்டிருப்பதாகக் காணப்பட்டார். பின்னர் அவரது உடம்பை மலரால் மூடி நெருங்கிய உறவினரைப் போல் அழுதபின்பு பாபா மசூதிக்குத் திரும்பினார்.
மனிதர்களுக்குப் பல ஞானிகள் சத்கதி அளிப்பது கண்ணுறப்பட்டிருக்கிறது. ஆனால் சாயிபாபாவின் பெருமை ஒப்புவமையற்றது.
ஸ்ரீ ஸாயியைப் பணிக அனைவருக்கும் சாந்தி நிலவட்டும்.
(தொடரும்…)

No comments :
Post a Comment