நித்ய - அநித்ய வஸ்துக்களைப் பகுத்துணரும் விவேகம், மற்றும் அநித்ய வஸ்துக்களில் பற்றின்மை முதலியதான தத்துவங்களை பாபா அவரது உதி, தஷிணையின் மூலம் அடியவர்களின் காதுகளில் ஓத விரும்பினார். முன்னது (உதி) விவேகத்தையும், பின்னது (தஷிணை) பற்றின்மையையும் நமக்கு அறிவுறுத்தியது. இவ்விரண்டும் நம்மிடத்தில் இருந்தாலொழிய நாம் இச்சம்சார சாகரத்தைக் கடக்க முடியாது. எனவே பாபா தஷிணையைக் கேட்டுப் பெற்றார். அவர்கள் விடைபெறும்போது உதியைப் பிரசாதமாக அளித்து அதை அவர்கள் நெற்றியிலிட்டுத் தமது வரம் நல்கும் கரத்தை அவர்கள் தலைமீது வைத்தார். பாபா மகிழ்வான மனநிலையில் இருக்கும்போது ஆனதமாகப் பாடுவார். அத்தகைய ஒரு பாட்டு, உதியைப் பற்றியதாகும். உதி பாடலின் பல்லவி இவ்வாறானது.
ரமதே ராம் ஆவோஜி! ஆவோஜி!
உதியாங்கி கோனியா லாவோஜி! லாவோஜி!
ஓ! விளையாட்டு ராமா, வாரும்! வாரும்!
பாபா இதனை மிகுந்த தெளிவான இனிமையான குரலில் பாடுவது வழக்கம்.
உதியைப் பற்றி ஆன்மிகக் குறிப்பாகச் சொல்லப்பட்ட பொருள் இவ்வளவே. அதற்குத் தன்னுடையதான லௌகிக தனிமுறைச் சிறப்பும்கூட உண்டு. உதி ஆரோக்கியம், சுபிட்சம், கவலைகளினின்று விடுதலை மற்றும் பல லோகாயத லாபங்களை அளித்தது. உதி பற்றிய கதைகளை நாம் இப்போது தொடங்குவோம்.
ஸ்ரீ ஸாயியைப் பணிக அனைவருக்கும் சாந்தி நிலவட்டும்.
(தொடரும்…)

No comments :
Post a Comment