Saturday, 18 March 2023

ஸ்ரீஸாயி சரித்திரம் - அத்யாயம் 33 - பகுதி 4

No comments

நெறிகட்டும் பிளேக் வியாதி:-

ஒருமுறை பாந்த்ராவிலுள்ள அடியவர் ஒருவர் வேறோர் இடத்திலுள்ள தனது மகள், நெறிகட்டும் பிளேக் வியாதியால் கஷ்டப்பட்டுக்கொண்டிருக்கிறாள் என்பதை அறிந்தார்.  அவரிடம் உதி இல்லை.  எனவே அவர் நானா சாஹேப் சாந்தோர்கரிடம் அதை அனுப்பும்படி விஷயத்தைத் தெரியப்படுத்தினார்.  நானா சாஹேப் தனது மனைவியுடன் கல்யாணுக்குப் பயணம் செய்து கொண்டிருந்தபோது தாணே ரயில் நிலையத்துக்கருகில் உள்ள ஒரு சாலையில் இவ்விஷயத்தைக் கேள்விப்பட்டார்.  அப்போது அவரிடம் உதி இல்லை.  எனவே அவர் தரையிலிருந்து கொஞ்சம் மண்ணை எடுத்து பாபாவைத் தியானம் செய்து அவரது உதவியைத் தொழுது வேண்டிக்கொண்டு அருகிலிருந்த தனது மனைவியின் நெற்றியில் இட்டார்.  அடியவர் இவையெல்லாவற்றையும் கண்டார்.  பின்பு அவர் தமது மகள் வீட்டுக்குச் சென்றபோது மூன்று நாட்களாகக் கஷ்டப்பட்டுக்கொண்டிருந்த தனது மகள், தாணே ரயில் நிலையத்தருகில் நானா பாபாவை வேண்டிக்கொண்ட அதே சமயத்திலிருந்து குணமடையலானாள் என்பதை அறிந்து மிகவும் மகிழ்ச்சியடைந்தார்.

ஸ்ரீ ஸாயியைப் பணிக அனைவருக்கும் சாந்தி நிலவட்டும்.

(தொடரும்…)

No comments :

Post a Comment