Wednesday, 29 March 2023

ஸ்ரீஸாயி சரித்திரம் - அத்யாயம் 47 - பகுதி 1

No comments

இரண்டு ஆடுகளைப்பற்றி பாபாவின் பழைய ஞாபகங்களை சென்ற அத்தியாயம் விவரித்தது.  இது அத்தகைய இன்னும் பல ஞாபகங்களையும் வீரபத்ரப்பா, சனபஸப்பா ஆகியோரின் கதையையும்  கூறுகிறது. 

முன்னுரை:-

சாயியின் முகம் புனிதமானது.  சில கணங்களுக்கு நாம் நமது பார்வையை அவர்பால் செலுத்தினாலும் நமது முந்தைய பல பிறவிகளின் துக்கங்களையழித்து நம்மீது பேரானந்தத்தைப் பொழிகிறார்.  கருணையுடன் அவர் நம்மீது நோக்குவாராயின் நமது முன்னைய கர்மவினைக் கட்டுக்களெல்லாம் அறுபட்டு மகிழ்ச்சிக்கு வழிகாட்டப்படுகிறோம்.  கங்கை நதியானவள், அவளிடம் குளிப்பதற்காகச் செல்லும் மக்களனைவரின் பாவங்களையும், அழுக்கையும் நீக்குகிறாள்.  ஆனால் ஞானிகள் தன்னிடம் வரவேண்டுமென்றும், அவர்களது பாதாரவிந்தங்களால்  தான் ஆசீர்வதிக்கப்பட்டு, தன்னிடம் குவிக்கப்பட்ட அழுக்கு (பாவங்கள்) நீக்கப்படவேண்டுமென்றும் மிகுந்த ஆவலுடன் விரும்புகிறாள்.  ஞானிகளின் பாதாரவிந்தங்களால் மட்டுமே இப்பாவமூட்டை அழிக்கப்படும் என்று அவள் உறுதியாக அறிகிறாள்.  ஞானிகளுக்கெல்லாம் தலையாய முடிமணியாக சாயி விளங்குகிறார்.  அவரிடமிருந்து இப்போது நம்மைத் தூய்மைப்படுத்தும் பின்வரும் கதையைக் கேளுங்கள்.

ஸ்ரீ ஸாயியைப் பணிக அனைவருக்கும் சாந்தி நிலவட்டும்.

(தொடரும்…)

No comments :

Post a Comment