இந்த அத்தியாயமும் உதியின் முக்கியத்துவத்தைக் குறிக்கும் செய்திகளைத் தொடர்கிறது. பாபா சோதிக்கப்பட்டுப் போதாக்குறை ஏதுமில்லை எனக் கண்டுணரப்பட்ட இரண்டு நிகழ்சிகளையும் அது உரைக்கிறது. இந்நிகழ்சிகளை முதலில் காண்போம்.
முன்னுரை:-
ஆன்மிக விஷயங்களில் அல்லது முயற்சிகளில் சமயப்பிரிவு உணர்ச்சி நமது முன்னேற்றத்துக்குப் பெருந்தடையாய் இருக்கிறது. கடவுள் உருவமற்றவர் என நம்புவோர்கள், "கடவுள் உருவமுள்ளவர் என நம்புவது மாயத் தோற்றமே. ஞானிகளும் மனிதர்களே" என்று கூறுவது நமது காதில் விழுகிறது. பின்னர் ஏன் அவர்கள் ஞானிகளின்முன் தலைவணங்கி தஷிணை கொடுக்கிறார்கள்? இதர சமயப் பிரிவுகளைச் சேர்ந்தவர்களும் ஆட்சேபணைகள் எழுப்பி தங்களது சத்குருக்களை விட்டுவிட்டு, மற்ற ஞானிகள்முன் தலைவணங்கி ஏன் தங்கள் உறுதியான கடப்பாட்டினைச் செலுத்தவேண்டும்?" என்று கூறுகின்றனர். முன்னால் இதைப்போன்ற ஆட்சேபணைகள் சாயிபாபாவைப் பற்றியும் சொல்லப்பட்டன.
இப்போதும்கூட அவைகள் செவியில் விழுகின்றன. சிலர் தாங்கள் ஷீர்டிக்குச் சென்றபோது பாபா அவர்களிடம் தஷிணை கேட்டதாகவும், இம்முறையில் ஞானிகள் பணம் சேர்ப்பது நல்லதா என்றும் இம்மாதிரி அவர்கள் செயல் புரிவார்களாயின் அவர்கள் ஞானம் எல்லாம் எங்கே போயிற்று என்றும் வினவினர். ஆனால் இம்மாதிரி ஏளனம் உரைக்க ஷீர்டிக்குச் சென்றவர்களெல்லாம் அங்கு பிரார்த்தனைக்குத் தங்கிவிட்டனர்.
ஸ்ரீ ஸாயியைப் பணிக அனைவருக்கும் சாந்தி நிலவட்டும்.
(தொடரும்…)

No comments :
Post a Comment