Sunday, 19 March 2023

ஸ்ரீஸாயி சரித்திரம் - அத்யாயம் 35 - பகுதி 5

No comments

பாலாஜி பாடீல் நெவாஸ்கர்:- 

இம்மனிதர் பாபாவின் ஒரு பெரும் பக்தர்.  மிகமிகச் சிறப்பான பற்றற்ற பணியைப் பாபாவுக்கு அவர் செய்தார்.  ஒவ்வொரு நாளும் ஷீர்டியில் பாபா தமது தினசரி நியமமாக நடந்துவரும் தெருக்கள், பாதைகள் எல்லாவற்றையும் பெருக்கி சுத்தமாக்கினார்.  அவருக்குப் பின்னர், இப்பணியானது ராதாகிருஷ்ணமாயி என்ற பக்த மாதுவாலும், அதற்குப்பின் அப்துலாலும் அதே அளவு சிறப்புடன் செய்யப்பட்டது.

ஒவ்வொரு ஆண்டும் பாலாஜி கோதுமை அறுவடை செய்தபோது அனைத்தையும் பாபாவுக்குக் கொண்டுவந்து சமர்ப்பித்துவிடுவார்.  மீதமாக பாபா எதைக் கொடுத்தாரோ அதைப் பெற்றுக்கொண்டு தமது குடும்ப சம்ரக்ஷணத்தை செய்தார்.  இந்நடைமுறையானது அவரால் பல ஆண்டுகள் செய்யப்பட்டு அவருக்குப்பின் அவரது மகனாலும் செய்யப்பட்டது.

ஸ்ரீ ஸாயியைப் பணிக அனைவருக்கும் சாந்தி நிலவட்டும்.

(தொடரும்…)


No comments :

Post a Comment