Friday, 17 March 2023

ஸ்ரீஸாயி சரித்திரம் - அத்யாயம் 33 - பகுதி 1

No comments

சென்ற அத்தியாயத்தில் குருவின் பெருமையைப்பற்றி நாம் விவரித்தோம்.  இந்த அத்தியாயத்தில் உதியின் பெருமையைப்பற்றி விளக்குவோம்.

முன்னுரை:-

இப்போது பெரும் ஞானிகளின் தலைதாழ்த்தி வணங்குவோம்.  அவர்களின் கருணை நிறைந்த கடைக்கண் பார்வைகளே மலைபோன்ற பாவங்களை அழித்து, நமது ஒழுக்கத்திலுள்ள தீய கறைகளை நீக்கிச் சீர்படுத்துகிறது.  அவர்களின் சாதாரணப் பேச்சே நல்ல உபதேசத்தை அளித்து நமக்கு அழியாத இன்பத்தை நல்குகிறது.  'இது எங்களுடையது, அது உங்களுடையது' என்ற பாகுபாடு அவர்கள் மனதில் எழுவதே இல்லை.  அவர்களது கடனானது இப்பிறவியிலும், இனிவரும் பிறவிகளிலும் நம்மால் திருப்பிக் கொடுக்கப்படப் போவதேயில்லை.

ஸ்ரீ ஸாயியைப் பணிக அனைவருக்கும் சாந்தி நிலவட்டும்.
(தொடரும்…)

No comments :

Post a Comment