Sunday, 19 March 2023

ஸ்ரீஸாயி சரித்திரம் - அத்யாயம் 35 - பகுதி 4

No comments
தூக்கமின்மை வியாதி:-

பாந்த்ராவில் காயஸ்த பிரபு ஜாதியைச் சேர்ந்த ஒருவர் நெடுநாள் தூக்கமின்மை நோயால் அல்லலுற்றார்.  அவர் படுக்கையில் படுத்தவுடனே அவரது இறந்துபோன தந்தையார் கனவில் தோன்றி அவரைக் கடுமையாகத் திட்டினார்.  இது அவரது தூக்கத்தைக் கலைத்து இரவு முழுவதும் அவரை இருப்புக்கொள்ளாமல் செய்தது.   ஒவ்வொருநாள் இரவும் இது நடந்தது.  அம்மனிதருக்கு என்ன செய்வதென்றே புரியவில்லை.  ஒருநாள் பாபாவின் பக்தரொருவரை அவர் இவ்விஷயத்தில் கலந்தாலோசித்தார்.  பிழையாத நிவாரண சஞ்சீவினியாக பாபாவின் உதி ஒன்றையே அவர் அறிவார். 

அவருக்குச் சிறிது உதி கொடுத்து அவர் படுக்கைக்குப் போகும்முன்னர், அதைச் சிறிது நெற்றியிலிட்டுக் கொள்ளும்படியும், அவ்வுதிப் பொட்டலத்தை தலையணைக்கடியில் வைத்துக் கொள்ளும்படியும் கூறினார்.  இந்த சிகிச்சையை அவர் முயன்று பார்த்தார்.  அவரது பெரும் வியப்புக்கும், மகிழ்வுக்கும் ஏற்ப அவருக்கு நல்ல உறக்கம் ஏற்பட்டது.  எவ்விதத் தொந்தரவும் இல்லை.  இந்தச் சிகிச்சையையே அவர் தொடர்ந்து பின்பற்றி எப்போதும் சாயியையே நினைவு கூர்ந்தார்.  பின்னர் சாயிபாபாவின் படம் ஒன்றை பெற்று தனது தலையணைக்கருகில் அதைத் தொங்கவிட்டு அதனை தினந்தோறும் வழிபடத் தொடங்கி வியாழக்கிழமைகளில் பூமாலை, நைவேத்தியம் முதலியவற்றைச் சமர்ப்பித்தார்.  பின்னர் அவர் சௌக்கியமாகி முந்தைய தொந்தரவையே முழுவதும் மறந்துவிட்டார்.

ஸ்ரீ ஸாயியைப் பணிக அனைவருக்கும் சாந்தி நிலவட்டும்.
(தொடரும்…)

 

No comments :

Post a Comment