Tuesday, 21 March 2023

ஸ்ரீஸாயி சரித்திரம் - அத்யாயம் 40 - பகுதி 1

No comments
முன்னுரை:-

தம் அடியவர்களுக்கு லௌகிக, ஆன்மிக விஷயங்களில் அறிவுரை பகரும் ஸ்ரீ சமர்த்த சாயி புனிதமானவர். 

தங்கள் வாழ்வின் இலட்சியத்தை அவர்கள் எய்தும் வண்ணம் அவர்களை ஊக்குவித்து மகிழ்வடையச் செய்கிறார்.  அவர்களின் தலையில் தம் கையால் ஆசீர்வதிக்கும்போது தமது சக்தியை அவர்களிடம் மாற்றி, பேதப்படுத்தும் உணர்ச்சியை அழிக்கிறார்.  த்வைத உணர்வின்றி, வித்தியாசமின்றி பக்தர்கள் கீழே வீழ்ந்து வணங்கும்போது அவர்களை அரவணைத்து எட்டி அடையமுடியாத பொருளாகிய தம்மையே அவர்களுக்குக் கொடுக்கிறார்.

மழைக்காலத்தில் கடல், ஆறுகளுடன் கலப்பதுபோல் பக்தர்களுடன் அவர் ஒன்றாகி அவர்களுக்குத் தம் ஆற்றலையும், அந்தஸ்தையும் அளிக்கிறார்.  கடவுளின் லீலைய மட்டும் பாடிக்கொண்டிருப்போருக்கு நிகராக அல்லது அவர்களைக் காட்டிலும் கடவுளின் அடியவர்களின் லீலா வினோதங்களைப் பாடுவோர் பாபாவுக்குப் பிரியமானவர்கள் என்பது இதன்மூலம் அறியப்படுகிறது.  தற்போது இவ்வத்தியாயத்தின் கதைகளுக்குத் திரும்புவோம்.

ஸ்ரீ ஸாயியைப் பணிக அனைவருக்கும் சாந்தி நிலவட்டும்.

(தொடரும்…)

No comments :

Post a Comment