Friday, 17 March 2023

ஸ்ரீஸாயி சரித்திரம் - அத்யாயம் 32 - பகுதி 3

No comments

உண்ணாவிரதமும் திருமதி கோகலேயும்:-

பாபா ஒருபோதும் பட்டினி இருந்ததில்லை.  மற்றவர்களையும் பட்டினியிருக்க அனுமதிக்கவில்லை.  விரதம் இருப்பவன் மனது அமைதியாய் இருப்பதே இல்லை.  பின்னர் அவன் எங்ஙனம் பரமார்த்திகத்தை அடையமுடியும்?  வெறும் வயிற்றுடன் கடவுள் அறியப்படமாட்டார்.  முதலில் ஆன்மா சாந்தப்படவேண்டும்.  வயிற்றில் உணவின் ஈரம் இல்லையாயின் அவர்தம் புகழை எந்நாவுடன் நாம் இசைக்க முடியும்?  கடவுளை எந்தக் கண்களுடன் பார்க்க முடியும்?  அல்லது எந்தக் காதுகளால்தான் அவர் புகழைக் கேட்க முடியும்?

சுருக்கமாக, நமது எல்லா உறுப்புக்களும் அவைகட்குரிய போஷிப்பைப் பெற்று நன்றாக இருக்கும்போது கடவுளை அடைவதற்குரிய பக்தி மற்றும் பல சாதனைகளையும் நாம் பெற முடியும்.  எனவே பசியோடிருத்தலோ மிகவும் உண்பதோ ஆகாது.  உடலுக்கும், மனதுக்கும் மிதமான போக்கே உண்மையில் நல்லது. 

திருமதி கோகலே என்ற பெண்மணி பாபாவின் பக்தையான திருமதி காஷிபாய் கனிட்கர்  என்பவளிடமிருந்து தாதா கேல்கருக்கு ஒரு அறிமுகக் கடிதம் வாங்கிவந்தாள்.  அதற்கு முந்தின தினம் பாபா, தாதா கேல்கரிடம் தமது குழந்தைகளை ஷிம்காவின் (புனித நாட்கள்) போது பட்டினியாயிருப்பதைத் தாம் அனுமதிக்க முடியாது என்று கூறினார்.

அடுத்த நாள் அப்பெண்மணி தாதா கேல்கருடன் சென்று பாபாவின்முன் அமர்ந்தபோது பாபா, உடனே அவளை நோக்கி, "பட்டினியிருக்கத் தேவையென்ன?" என்று கேட்டார்.  தாதாபட்டின் வீட்டுக்குப் போய் பூரணப் போளியைச் (கடலை மாவு, வெல்லம் சேர்ந்த கோதுமை ரொட்டி) செய்து அவர் குழந்தைகளுக்குக் கொடுத்து நீயும் உண்பாய் என்று கூறினார்.  பண்டிகை நன்னாட்கள் இருந்தன.  திருமதி கேல்கர் அப்போது வீட்டு விலக்கம் ஆகியிருந்தாள்.  தாதாபட்டின் வீட்டில் சமையல் செய்ய ஒருவரும் இல்லை, எனவே பாபாவின் அறிவுரை 'காலத்திநாற்' செய்ததாயிற்று.  திருமதி கோகலே தாதாபட்டின் வீட்டிற்குச் செல்லவேண்டியதாயிற்று.  சொல்லியபடி அப்பண்டத்தைச் செய்யவேண்டியதாயிற்று.  அன்றைக்கு அவள் சமைத்து மற்றவர்க்கும் போட்டுத் தானும் உண்டாள்.  என்ன அருமையான கதை.  எத்தகைய ஆழமான படிப்பினை!

ஸ்ரீ ஸாயியைப் பணிக அனைவருக்கும் சாந்தி நிலவட்டும்.
(தொடரும்…)


No comments :

Post a Comment