பாபா தமது பால்யப் பருவத்தின் கதை ஒன்றைப் பின்வருமாறு சொன்னார். "நான் சிறு பையனாக இருந்தபோது உணவுக்காக வேலை தேடிக்கொண்டிருந்தேன். பீட்காவனுக்கு சென்றேன். அங்கு எனக்கு எம்ப்ராய்டரி வேலை கிடைத்து. ஒரு துன்பத்தையும் பாராது கடுமையாக உழைத்தேன். முதலாளி என்மீது மிகுந்த மகிழ்ச்சியடைந்தார். எனக்குமுன் மற்ற மூன்று பையன்களும் வேலை செய்தனர். முதல்வன் ரூ.50ம், இரண்டாமவன் ரூ.100ம், மூன்றாமவன் ரூ.150ம் பெற்றனர். இவர்களின் மொத்தத் தொகையைப் போல் இரண்டு பங்கு நான் பெற்றேன். அதாவது ரூ.600ஐப் பெற்றேன். எனது புத்திசாதுர்யத்தைக் கண்ட முதலாளி என்னை நேசித்தார், துதித்தார். முழுஆடை, தலைக்கு டர்பன், உடம்புக்கு ஷேலா(சால்வை) முதலியவற்றைத் தந்து என்னைக் கௌரவித்தார். இவற்றி உபயோகிக்காமல் நான் பத்திரமாக வைத்திருந்தேன். எந்த ஒரு மனிதன் அளிப்பதும் நெடுநாள் இருப்பதில்லை. அது முழுமையுடையதுமல்ல. ஆனால் எனது எஜமானர் (கடவுள்) அளிப்பதோ காலமுடிவு பரியந்தம் நிலைத்திருக்கிறது. அவரின் வெகுமதியை வேறெந்த வெகுமதியுடனும் ஒப்பிடமுடியாது. எனது எஜமானரோ, 'எடுத்துக்கொள், எடுத்துகொள்' என்கிறார். ஆனால் எல்லோரும் என்னிடம் வந்து 'கொடு, கொடு' என்கிறார்கள். நான் கூறுவதன் பொருளை ஒருவரும் கவனத்துடன் பார்ப்பதில்லை.
Friday, 17 March 2023
ஸ்ரீஸாயி சரித்திரம் - அத்யாயம் 32 - பகுதி 4
பாபாவின் எஜமானர்:-
எனது எஜமானரின் கஜானா நிரம்பியிருக்கிறது. நிரம்பி வழிகிறது. நான் கூறுவதாவது, வண்டிப் பாரங்களில் இச்செல்வத்தை எடுத்துச் செல்லுங்கள். சத்தியவதியான தாயாரின் ஆசீர்வதிக்கப்பட்ட மகன் இச்செல்வத்தால் தன்னை நிரப்பிக் கொள்ளட்டும். எனது பக்கீரின் திறமை, எனது பகவானின் லீலை, எனது எஜமானரின் இயகையான செயல்வன்மை இவை மிகவும் நூதனமானவை. என்னைப்பற்றி என்ன? உடம்பு (மண்) மண்ணுடன் கலந்துவிடும். இந்நேரம் இனிமேல் மீண்டும் வராது. நான் எங்கோ செல்கிறேன். எங்கோ அமர்கிறேன். மாயை என்னைக் கடுமையாகத் தொல்லைப்படுத்துகிறது. இருப்பினும் எனது மாந்தர்களுக்காக எப்போது நான், ஆசைபூண்டு கவலைப்படுகிறேன். எதையாவது (ஆன்மிக முயற்சி) செய்யும் ஒருவன் அதன் பழத்தை அறுவடை செய்கிறான். எனது இம்மொழிகளைக் கேட்பவன் விலைமதிப்பற்ற சந்தோஷத்தைப் பெறுகிறான்".
ஸ்ரீ ஸாயியைப் பணிக அனைவருக்கும் சாந்தி நிலவட்டும்.
(தொடரும்…)
Subscribe to:
Post Comments
(
Atom
)

No comments :
Post a Comment