Thursday, 30 March 2023

ஸ்ரீஸாயி சரித்திரம் - அத்யாயம் 52 - பகுதி 1

No comments

நாம் 51வது அத்தியாயத்தை முடித்துவிட்டு கடைசி அத்தியாயத்திற்கு (மூல நூலில் 52வது அத்தியாயம்) வருகிறோம்.  இதில் முடிவுரையாகச் சொல்லும்போது ஹேமத்பந்த் மராத்தியப் புனித நூல்களில் உள்ளபடி இதுவரை உள்ள அத்தியாயங்களில் கூறப்பட்டுள்ள விஷயங்களை பாடல்களாக அட்டவணைப்படுத்தி எழுதப்போவதாகக் கூறியிருந்தார்.  ஆனால் துரதிர்ஷ்டவசமாக அம்மாதிரி அட்டவணை ஹேமத்பந்தின் எழுத்துப் பிரதிகளில் இல்லை.

எனவே பாபாவின் ஆசிபெற்ற சிறந்த பக்தரான தாணேவைச் சேர்ந்த மாஜி மம்லதார் திரு B.V.தேவ் என்பவர் அதை அமைத்து வழங்கினார்.  ஆங்கிலப் புத்தகங்களில் ஆரம்பத்தில் அட்டவணை கொடுத்து ஒவ்வொரு அத்தியாயத்தில் கண்டுள்ளவற்றை அதன் தலைப்பில் கொடுப்பதுபோல், இந்த அத்தியாயத்தில் கண்டுள்ளவற்றை அட்டவணையின் கடைசியாகக் கருதவேண்டாம்.  எனவே இதை முடிவுரையாகக் கருதுவோம்.  துரதிர்ஷ்டவசமாக இந்த அத்தியாயத்தின் கையெழுத்துப் பிரதியைச் சரிபார்த்து அச்சிடும் வரையில் ஹேமத்பந்த் உயிருடன் இல்லை.  அது அச்சகத்துக்கு அனுப்பப்படும் சமயம் தேவ் அவர்கள் அவற்றின் முடிவற்ற நிலையையும் சில இடங்களில் புரிந்துகொள்ள முடியாத நிலையில் இருப்பதையும் கண்டார்.  ஆயினும் அது அவ்வாறே பிரசுரிக்கப்பட வேண்டியதாயிற்று.  அவற்றின் முக்கியமான தலைப்புக்கள் இங்கு சுருக்கமாகக் கொடுக்கப்பட்டுள்ளன. 

 ஸ்ரீ ஸாயியைப் பணிக அனைவருக்கும் சாந்தி நிலவட்டும்.

(தொடரும்…)


No comments :

Post a Comment