Monday, 20 March 2023

ஸ்ரீஸாயி சரித்திரம் - அத்யாயம் 38 - பகுதி 4

No comments
காலா (கதம்ப உணவு):-

நைவேத்தியம் வினியோகிக்கப்படும் கதைக்குத் திரும்புவோம்.  ஆரத்தி நிகழ்ச்சி முடிந்தபின்னால் எல்லோரையும் உதியுடனும், ஆசீர்வாதங்களுடனும் அனுப்பிய பிறகு உள்ளே சென்று, நிம்பாரில் தமது முதுகைச் சாய்த்துக்கொண்டு இரண்டு வரிசையுள்ள பந்தியுடன் அமர்ந்திருப்பார்.  நைவேத்யம் கொண்டுவந்த பக்தர்கள் பூரி, மாண்டி, போளி, பாஸந்தி, சன்ஸா, சோறு முதலியவை உள்ள தங்களது உணவுப் பதார்த்தங்களை வலிந்து உள்ளே அனுப்புவார்கள்.

பாபாவினால் புனிதமாக்கப்பட்ட உணவின் பிரசாதத்திற்காக வெளியே காத்துக்கொண்டிருப்பார்கள்.  எல்லா உணவுகளும் கதம்பக் கூட்டாகக் கலக்கப்பட்டு பாபாவின் முன் வைக்கப்படும்.  அதை அவர் கடவுளுக்குச் சமர்ப்பித்து புனிதப்படுத்துவார்.  அதன் பகுதிகள் வெளியில் காத்துக்கொண்டிருக்கும் நபர்களுக்கு அளிக்கப்பட்டு மீதம் உள்ளே பாபா நடுநாயகமாக அமர்ந்திருக்கும் மக்களுக்குப் பரிமாறப்படும்.  இரண்டு வரிசையில் அமர்ந்திருக்கும் பக்தர்களும் வயிறார உண்ணுவர்.  புனிதமாக்கப்பட்ட உணவை உள்ளே அமர்ந்திருக்கும் அனைவருக்கும், ஒவ்வொருவரின் தேவையையும் சௌகரியத்தையும் கவனித்துப் பரிமாறும்படி நானா சாஹேப் நிமொண்கரையும், ஷாமாவையும் பாபா தினந்தோறும் கேட்டுக்கொள்வார்.

அவர்கள் இதை மிகவும் ஜாக்கிரதையாகவும், பிரியத்துடனும் செய்வர்.  இவ்வாறு அளிக்கப்பட்ட ஒவ்வொரு கவள உணவும் அடியவர்களுக்குப் போஷாக்கையும், திருப்தியையும் தந்தது.  எத்தகைய இனிமையான, விருப்பமான, புனிதமாக்கப்பட்ட உணவு அது!  எப்போதும் புனிதமானது, தெய்வீகமானது. 

ஸ்ரீ ஸாயியைப் பணிக அனைவருக்கும் சாந்தி நிலவட்டும்.
(தொடரும்…) 

No comments :

Post a Comment