சென்ற அத்தியாயத்தில் நாம் பாபாவின் சாவடி ஊர்வலத்தைப் பற்றிப் பார்த்தோம். இந்த அத்தியாயத்தில் ஹண்டி (பெரிய அண்டா) என்ற பாபாவின் சமையல் பாத்திரத்தைப் பற்றியும் மற்றும் சில விஷயங்களையும் காண்போம்.
முன்னுரை:-
ஓ! புனிதமான சத்குரு சாயி உலகமனைத்துக்கும் மகிழ்ச்சியை நல்கி அடியவர்களின் நலன்களை நிறைவேற்றி தங்களின் திருவடிகளைச் சரணடைந்தவர்களின் பேரிடர்களைப் போக்குபவருமான தங்களை வணங்குகிறோம். மிகுந்த தாராள குணமுடையவராகவும், தங்களைச் சரணடைவோர்களின் பாதுகாவலராகவும், ரட்சகராகவும் விளங்கும் தாங்கள் மக்களுக்காக இரங்கி அவர்களுக்கு நன்மை செய்யவே அவதரித்திருக்கிறீர்கள்.
தூய ஆன்மாவின் சாராம்சமான சாறு பிரம்மாவின் அச்சில் ஊற்றப்பட்டு இதிலிருந்து ஞானிகளுக்குள் எல்லாம் முடிமணியாக சாயி அவதரித்து விளங்குகிறார். இந்த சாயி ஆத்மராமனேயாவார். தூய தெய்வீகப் பேரின்பத்தின் இருப்பிடமே அவர். வாழ்க்கையின் அனைத்துக் குறிக்கோளையும் தாமே அவர் எய்தியதோடு நில்லாது, தமது அடியவர்களைப் பற்றற்றவர்களாகவும், சுதந்திரமானவர்களாகவும் ஆக்கினார்.

No comments :
Post a Comment