Saturday, 18 March 2023

ஸ்ரீஸாயி சரித்திரம் - அத்யாயம் 34 - பகுதி 5

No comments
ஹர்தா கனவான்:- 

ஹர்தாவைச் சேர்ந்த முதியவர் ஒருவர் தமது மூத்திரப் பையிலுள்ள  கல் ஒன்றால் கஷ்டப்பட்டார்.  அத்தகைய கற்களெல்லாம் பொதுவாக ரணசிகிச்சை மூலமாகவே நீக்கப்படுகின்றன.  மக்கள் அவரையும் ஒரு அறுவை சிகிச்சை செய்துகொள்ளும்படி கூறினர்.  அவர் முதுமையும், தளர்ச்சியும் உடையவராயிருந்தார்.  அவருக்கு மனோதிடமும் தேவையாயிருந்தது.  அறுவை சிகிச்சைக்குத் தன்னை உட்படுத்திக்கொள்வதை அவரால் நினைக்க இயலவில்லை.  அவரது கஷ்டம் மற்றொரு வகையில் தீர இருந்தது.

அந்த நகரத்தின் இனாம்தார் அந்நேரத்தில் அவ்விடத்துக்கு வரும்படியாக நிகழ்ந்தது.  அவர் பாபாவின் அடியவர்களில் ஒருவர்.  எப்போதும் தம்மிடம் உதி கையிருப்பை வைத்திருந்தார்.  சிலரின் சிபாரிசின் பேரில் அம்முதியவரின் மகன் உதியை சிறிது அவரிடமிருந்து பெற்று தண்ணீரில் அதைக் கலக்கி தனது கிழத்தந்தைக்கு உட்கொள்ளக் கொடுத்தான்.  ஐந்தே நிமிடத்திற்குள் உதி உடம்பில் சார்ந்து, கல் கரைந்து சிறுநீர் வழியாக வெளிவந்துவிட்டது.  முதியவரும் விரைவில் குணம் அடைந்தார்.

ஸ்ரீ ஸாயியைப் பணிக அனைவருக்கும் சாந்தி நிலவட்டும்.

(தொடரும்…)

No comments :

Post a Comment