மாயையின் அளவறியா சக்தி
பாபாவின் மொழிகள் எப்போதும் சுருக்கமானவை, மிருதுவானவை, ஆழமானவை, பொருள் செறிந்தவை, திறமையானவை, நன்றாகச் சமநிலைப் படுத்தப்பட்டவை. அவர் எப்போதும் திருப்தியடைந்தவராய் இருந்தார். எதற்கும் கவலைப்படவில்லை. அவர் சொன்னார், "நான் ஒரு பக்கிரியானபோதும், எனக்கு வீடோ, மனைவியோ இல்லாதிருப்பினும் எல்லாக் கவலைகளையும் விட்டொழித்து நான் ஒரே இடத்தில் வசித்தாலும் தடுக்கமுடியாத மாயை என்னை அடிக்கடி துரத்துகிறாள். என்னை மறந்தாலும், அவளை மறக்கமுயயவில்லை. அவள் என்னை எப்போதும் சூழ்ந்துகொள்கிறாள். பரமாத்மா ஸ்ரீ ஹரியினுடைய (தோற்ற சக்தி) பிரம்மா, மற்றவர்களையும் துரத்துகிறது. பின் என்னைப்போன்ற ஏழைப் பக்கிரியைப் பற்றிப் பேச என்ன இருக்கிறது? பரமாத்மாவிடம் சரண் புகுவோர், அவரது அருளால் அவளது பந்தங்களினின்றும் விடுவிக்கபடுவர்."
மாயையின் சக்தியைப் பற்றி இம்மொழிகளால் பாபா பேசினார். கிருஷ்ண பரமாத்மா ஞானிகள் தமது உயிருள்ள ரூபங்கள் என்ற பாகவதத்தில் உத்தவருக்கு உபதேசித்திருக்கிறார். பாபா தமது அடியவர்களின் நலனுக்காக யாது கூறியிருக்கிறார் என்பதைக் கவனியுங்கள்: "யார் அதிஷ்டசாலியோ எவருடைய பாவங்கள் ஒழிந்தனவோ, அவர்கள் எனது வழிபாட்டை எய்துகிறார்கள். 'சாயி சாயி' என்று எப்போதும் கூறிக்கொண்டிருப்பீர்களானால் நான் உங்களை ஏழ்கடலுக்கு அப்பால் எடுத்துச் செல்வேன். இம்மொழிகளை நம்புங்கள். நீங்கள் நிச்சயம் நன்மையடைவீர்கள். வழிபாட்டின் கூறுகள் எட்டோ, பதினாறோ எனக்குத் தேவையில்லை. எங்கு முழுமையான பக்தி இருக்கிறதோ அங்கு நான் அமர்கிறேன்". தம்மைத்தாமே முழுவதுமாக சரணடைவோர்களின் தோழரான சாயி, அவர்களின் நன்மைக்காக என்ன செய்தார் என்பதைத் தற்போது படியுங்கள்.

No comments :
Post a Comment