பீமாஜி பாடீல்:
புனே ஜில்லா, ஜுன்னர் தாலுக்கா நாரயண்காவனைச் சேர்ந்த பீமாஜி பாடீல் என்பவர் பல வியாதிகளாலும், நெடுநாள் நெஞ்சு வலியாலும் துன்பப்பட்டார். முடிவில் அது கயரோகமாக மாறியது. அவர் எல்லாவித சிகிச்சைகளையும் முயன்று ஒரு பிரயோசனமுமில்லை. எல்லா நம்பிக்கைகளையும் இழந்து, முடிவாகக் கடவுளை நோக்கி அவர் வேண்டிக்கொண்டார். "ஓ! நாராயண மூர்த்தியே, இப்போது என்னைக் குணப்படுத்தும்". சூழ்நிலைகள் எல்லாம் நன்றாய் இருக்கையில் நாம் கடவுளைப் பற்றி நினைப்பதில்லை. கேடும், துரதிஷ்டமும் நம்மைத் தாக்கும்போது நாம் அவரை நினைக்கிறோம். எனவே பீமாஜி இப்போது கடவுளை நோக்கித் திரும்பினார். இவ்விஷயத்தில் பாபாவின் பெரும் அடியவரான நானா சாஹேப் சாந்தோர்க்கரைக் கலந்தாலோசிக்க அவருக்குத் தோன்றியது. தனது துன்பமனைத்தையும் கூறி அவருக்கு ஒரு கடிதம் எழுதி அவருடைய கருத்தைத் தெரிவிக்கக் கேட்டிருந்தார்.
நானா தமது பதிலில் ஒரேஒரு வழிதான் இருக்கிறது. அதாவது பாபாவின் பாதங்களினின்று உதவி பெறுவதேயாகும் என்று கூறினார். ஷீர்டிக்கு அவர் அழைத்துவரப்பட்டு பாபாவின் முன்னர் அமர்த்தப்பட்டார். நானா சாஹேப்பும், ஷாமாவும் (மாதவ்ராவ் தேஷ்பாண்டே) அங்கு இருந்தனர். முன்னைய தீய கர்மங்களாலேயே இவ்வியாதி என்று பாபா சுட்டிக்காண்பித்து முதலில் இதில் தலையிடத் தீமானம் இல்லாதவராய் இருந்தார். நோயாளியோ தாம் அனாதரவானவர் என்றும், அவரையே சரணாகதி அடைந்திருப்பதாகவும், அவர்தாம் கடைசி கதியென்றும், கருணை காட்டும்படியும் கூறி அலறத் தொடங்கினார். அப்போது பாபாவின் உள்ளம் உருகியது. அவர் கூறியதாவது, "பொறு, உன்னுடைய கவலைகளைத் தூர ஏறி, உன்னுடைய துன்பங்கள் ஒரு முடிவுக்கு வந்துவிட்டன. ஒருவன் எவ்வளவுதான் நசுக்கப்பட்டு, வேதனைப்பட்டவனாக இருப்பினும், இம்மசூதியில் கால் வைத்தவுடனே அவன் மகிழ்ச்சியின் பாதையில் செல்கிறான். இங்கேயுள்ள பக்கிரி மிகவும் அன்பானவர். அவர் இவ்வியாதியைக் குணப்படுத்துவார். எல்லோரையும் அன்புடனும், ஆசையுடனும் பாதுகாப்பார்". ஐந்து நிமிடத்திற்கு ஒருமுறை நோயாளி இரத்த வாந்தி எடுத்துக்கொண்டிருந்தார். ஆனால் பாபாவின் சந்நிதானத்தில் எவ்வித வாந்தியும் இல்லை. நம்பிக்கையும், கருணையும் கொண்ட மொழிகளை பாபா உதித்த அதே தருணத்திலிருந்தே வியாதி குணமடையும் நிலைக்குத் திரும்பியது. அசௌகரியமும், சுகாதாரக் குறைவுமுள்ள பீம்பாயின் வீட்டில் தங்கும்படி பாபாவால் கேட்கப்பட்டார். ஆனால் பாபாவின் உத்தரவுக்குக் கீழ்ப்படியவேண்டும். அவர் அங்கு தங்கியிருக்கையில் பாபா அவரை இரண்டு கனவுகள் மூலம் குணப்படுத்தினார்.
முதல் கனவில் தன்னை ஒரு பையனாகவும், மராட்டிச் செய்யுள் ஒப்பிக்காததற்காக உபாத்தியாயரின் கடுமையான பிரம்படியை வாங்கிக் கஷ்டப்படுவதைப் போன்றும் கண்டார். இரண்டாவது கனவில் ஒரு கல்லை யாரோ ஒருவர் தனது நெஞ்சின்மீது மேலும் கீழும் உருட்டிக் கடுமையான வலியையும், வேதனையையும் உண்டாக்குவதாகக் கண்டார். கனவில் அவர்பட்ட இக்கஷ்டத்துடன் அவரின் சிகிச்சை முடிவடைந்து அவர் வீடு திருப்பினார். பின்னர் அடிக்கடி ஷீர்டி வந்து பாபா தனக்குச் செய்ததை நன்றியுடன் நினைத்து சாஷ்டாங்கமாக நமஸ்கரித்தார்.
பாபாவும் நன்றியுள்ள நினைப்பு, மாறாத நம்பிக்கை, பக்தி இவற்றைத் தவிர வேறெதையும் எதிர்பார்க்கவில்லை. மகாராஷ்டிர மக்கள் பதினைந்து தினங்களுக்கு ஒருமுறை தங்களது இல்லங்களில் சத்யநாராயண பூஜையை எப்போதும் செய்கிறார்கள். ஆனால் தனது கிராமத்திற்கு திரும்பியபோது பீமாஜி பாடீல் புதிய சத்யசாயி விரத பூஜையை, சத்யநாராயண பூஜைக்குப் பதிலாக தனது இல்லத்தில் ஆரம்பித்தார்.
ஸ்ரீ ஸாயியைப் பணிக அனைவருக்கும் சாந்தி நிலவட்டும்.
(தொடரும்…)

No comments :
Post a Comment