பாபாவின் சொல்லும், கருணையும் எங்ஙனம் குணமாக்க முடியாத வியாதிகளையும் குணமாக்கியது என்பதைச் சென்ற அத்தியாயத்தில் கண்டோம். இப்போது பாபா எங்ஙனம் ரத்தன்ஜி வாடியாவை ஆசீர்வதித்துக் குழந்தையை அருளினார் என்பதை விவரிப்போம்.
இயற்கையிலேயே ஞானியினது வாழ்க்கையானது உள்ளும் - புறமும் இனிமையானதாய் இருக்கிறது. அவரது பல்வேறு செயல்கள் சாப்பிடுதல், நடத்தல், அவரின் இயற்கையான மொழிகள் எல்லாம் இனிமை வாய்ந்தவை. அவர்தம் வாழ்க்கையோ பேரானந்தம் மானிட உருப்பெற்றதாகும். தம்மைத் தமது அடியவர்கள் நினைப்பதற்கு வழிமுறையாக சாயி அதனை வெளியிட்டார். கடமை, செயல் இவற்றைப்பற்றி பல்வேறு கதைகளை அவர்கட்குச் சொன்னார். அது கடைமுடிவாக அவர்களை உண்மையான மதத்திற்கு இட்டுச்சென்றது. இவ்வுலகில் அவர்கள் மகிழ்ச்சியாக வாழவேண்டும். ஆனால் அவர்கள் எச்சரிக்கையாக இருக்கவேண்டும். வாழ்க்கையின் நோக்கத்தை அவர்கள் பெறவேண்டும். அதாவது ஆத்மானுபூதியை.
முந்தைய ஜென்மங்களிலுள்ள நல்வினைகளால் நாம் இவ்வுடம்பைப் பெற்றிருக்கிறோம். பக்தியையும், விடுதலையையும் இவ்வுதவியைக்கொண்டு பெறுவது தகுதியுடையதாகும். எனவே, எப்போதும் நாம் சோம்பலின்றி இருக்கவேண்டும். நமது குறிக்கோளையும், நோக்கத்தையும் பெறுவதில் நாம் எப்போதும் விழிப்பாய் இருக்கவேண்டும்.
நீங்கள் தினந்தோறும் சாயி லீலைகளைக் கேட்பீர்களானால், அவரை எப்போதும் காண்பீர்கள். நீங்கள் இவ்வண்ணமாக சாயிலீளைகளை நினைவூட்டிக் கொள்வீர்களானால், உங்கள் மனது அடிக்கடி மாறி ஓடித்திரிதலின்றி விடுபடும். இவ்விதமாகவே சென்றுகொண்டிருந்தால், அது முடிவாகச் சுத்த ஞானத்தில் இரண்டாகக் கலந்துவிடும்.
ஸ்ரீ ஸாயியைப் பணிக அனைவருக்கும் சாந்தி நிலவட்டும்.
(தொடரும்…)

No comments :
Post a Comment