முன்னுரை:
தமது அடியவர்களின் தகுதிகளை முதலில் சத்குரு கவனிக்கிறார் என்பதும் பின்னர் அவர்கள் மனத்தை எவ்வளவும் குழம்பச் செய்யாமல், பொருத்தமான செயல்துறைக் கட்டளைகளை அளித்து ஆத்மானுபூதி என்ற இலட்சியத்திற்கு, தொடர்ந்து அவர்களை இட்டுச்செல்கிறார் என்பது நன்றாக அறியப்பட்ட உண்மை ஆகும். இவ்வகையில் சத்குரு எவைகளை உபதேசிக்கிறாரோ, அல்லது கட்டளையிடுகிராரோ அவைகள் பலரறிய வெளியிடப்படக்கூடாது என்று சிலர் கூறுகிறார்கள். அவர்களுடைய உபதேசங்கள் பிரசுரிக்கப்பட்டால், அவை பயனற்றதாகிவிடுகின்றன என்று சிலர் நினைக்கிறார்கள். இக்கருத்து சரியானதன்று.
சத்குருவானவர் ஒரு பருவமேகம் போன்றவர். தமது அமிர்தத்தினை நிகர்மொழிகளைத் தங்குதடையின்றி விரிவாக அனைத்து இடங்களிலும் பரவும்படி கருதரிய ஆனந்தமழை பொழிகிறார்கள். இவைகளை நாம் மகிழ்ந்தனுபவித்து நமது உள்ளம் நிறைவெய்தும்வரை ஜீரணித்துக்கொண்டு, அதன்பின் தனிப்பயன் கருதி ஷேம ஒதுக்கீடு ஏதுமின்றி மற்றவர்களுக்கும் பரிமாறவேண்டும். நமது விழிப்பு நிலையில் அவர் போதிப்பவைகளுக்கு இந்நியதி பொருந்துவதுடன் நில்லாது, கனவு நிலையில் அவர் நமக்கு அளிக்கும் காட்சிகளுக்கும் இது பொருந்துவதேயாம். உதாரணத்துக்கு ஒரு நிகழ்ச்சியைக் கூறுமிடத்து புதகௌசிக ரிஷி, தாம் கனவில் கண்டத்தான புகழ்பெற்ற ராமரக்ஷ ஸ்தோத்திரத்தைப் பதிப்பித்தார். (ஸ்ரீ ராமரைப் புகழ்ந்து இரக்ஷணையை வேண்டி பாடப்பெறும் இரட்டை வரி செய்யுட்களான ஸ்லோகம்)
தனது குழந்தைகள் உடல் நலம் பெறுதற்பொருட்டாக கசப்பான ஆனால் ஆரோக்கியமான மருந்துகளை அவைகளின் தொண்டைக்குள் வலிந்து புகட்டும், பாசமுள்ள தாயைப் போன்றே, சாயிபாபா தமது அடியவர்களுக்கு ஆன்மீக செயல்துறைக் கட்டளைகளைத் தெரிவித்தார். அவரது முறைமை திரையிடப்பட்டதோ, இரகசியமானதோ அல்ல. ஆனால் முற்றிலும் வெளிப்படையானவை. அவருடைய கட்டளைகளைப் பின்பற்றிய அடியவர்கள் தங்களின் குறிக்கோளை எய்தினார்கள்.
சாயிபாபாவைப் போன்ற சத்குருக்கள் நமது அறிவாற்றல் என்னும் கண்களைத் திறந்துவிட்டு, ஆத்மாவின் தெய்வீக அழகுகளை நமக்குப் புலப்படுத்துகிறார்கள். இது செய்யப்படும்போது புலனுணர்வுப் பொருட்களில் நமக்குள்ள ஆசை மறைந்துவிடுகிறது. விவேகம்(பகுத்துணர்தல்), வைராக்கியம்(பற்றறுத்தல்) என்னும் இரட்டை கனிகள் நமது கைகளுக்குக் கிட்டுகின்றன. ஞானமென்பது தூக்கத்தில் கூடத் துளிர்விடுகின்றது.
முனிவர்களின் (சத்குரு) தொடர்பைப் பெறும்போதும், அவர்களுக்குச் சேவை செய்யும்போதும், அவர்களின் அன்பைப் பெறும்போதும், இவைகள் அனைத்தினையும் நாம் எய்துகிறோம்.
தமது அடியவர்களின் அவாக்களைப் பூர்த்தி செய்யும் ஆண்டவன், நமது உதவிக்கு வருகிறார். நமது தொல்லைகளையும், கஷ்டங்களையும் நீக்கி மகிழ்வெய்தச் செய்கிறார். ஆண்டவனாகவே கருதப்படும் சத்குருவின் உதவியே இம்முன்னேற்றத்திற்கு முழுவதுமான காரணமாகும். எனவே நாம் எப்போதும் சத்குருவையே பின்பற்றி இருந்து, அவர்தம் கதைகளைச் செவிமடுத்து அவரின் பாதத்தில் வீழ்ந்து வணங்கி அவருக்கே சேவை செய்யவேண்டும்.
ஸ்ரீ ஸாயியைப் பணிக அனைவருக்கும் சாந்தி நிலவட்டும்.
(தொடரும்…)

No comments :
Post a Comment