Tuesday, 7 March 2023

ஸ்ரீஸாயி சரித்திரம் - அத்யாயம் 20 - பகுதி 3

No comments

தந்நேரில்லா போதனைமுறை:-

மேற்கூறிய நிகழ்ச்சியிலிருந்து பாபாவின் வழிகள் தனித்தன்மை வாய்ந்தவை, மற்றவற்றிநின்றும் மாறுபாடானவை என்பதை வாசகர்கள் காண்பார்கள்.  பாபா ஒருபோதும் ஷீர்டியை விட்டுச் சென்றதில்லையாயினும் அவர் சிலரை மச்சிந்த்ரகட்டுக்கும், சிலரை கோலாப்பூர் அல்லது ரேலாப்பூருக்கும் சாதனைகள் பயில்வதற்கு அனுப்பினார்.  சிலருக்குத் தமது வழக்கமான ரூபத்தில் தோன்றினார்.  சிலருக்கு விழிப்பு நிலையிலோ அல்லது கனவிலோ, இரவிலோ அன்றிப் பகலிலோ தோன்றி அடியவர்களுக்கு பாபா உபதேசிக்கக் கையாண்ட எல்லா வழிகளையும் விவரிப்பதென்பது இயல்லாத காரியம்.

இக்குறிப்பிட்ட விஷயத்தில் அவர் தாஸ்கணுவை விலேபார்லேக்கு அனுப்பினார்.  அங்கே வேலைக்காரியின் மூலம் அவரது பிரச்னையை பாபா தீர்த்து வைத்தார்.  தாஸ்கணுவை வெளியே அனுப்பியிருக்க வேண்டியதில்லை.  நேரிடையாகவே பாபா அதை அவருக்குக் கற்பித்து இருக்கலாம் என்று கூறுவோர்க்கு பாபா சரியான அல்லது மிகச்சிறந்த வழியையே பின்பற்றினார் என்று நாம் கூறுகிறோம்.  அல்லாவிடில் ஏழைச் சிறுமியும், அவளது புடவையும் கடவுளால் வியாபிக்கப்பட்டு இருக்கிறது என்னும் பெரியதோர் பாடத்தினை தாஸ்கணு எவ்வாறுதான் கற்றிருக்க முடியும்!  இவ்வுபநிஷத்தைப் பற்றிய மற்றொரு உயர்ந்த பகுதியைக் கூறி இவ்வத்தியாயத்தை முடிக்கிறேன்.  

ஸ்ரீ ஸாயியைப்  பணிக அனைவருக்கும் சாந்தி நிலவட்டும்.

                                                                                                 (தொடரும்…)

No comments :

Post a Comment