Wednesday, 8 March 2023

ஸ்ரீஸாயி சரித்திரம் - அத்யாயம் 21 - பகுதி 1

No comments
இவ்வத்தியாயத்தில் விநாயக் ஹரிச்சந்திர டாகூர், புனேவைச் சேர்ந்த அனந்தராவ் பாடண்கர், பண்டரீபுரத்தைச் சேர்ந்த ஒரு வக்கீல் ஆகியோரின் கதைகளை ஹேமத்பந்த் விவரிக்கிறார்.  இந்தக் கதைகளெல்லாம் நிறைந்த சுவையானவை.  அவைகளை மிகுந்த கவனத்துடன் கற்றுக் கிரகித்துக் கொண்டால் வாசகர்களை அது ஆன்மீகப் பாதைக்கு அழைத்துச் செல்லும்.


முன்னுரை:-

முற்பிறவிகளில் சேகரித்த நல்வினைகள் என்ற ரூபத்திலுள்ள நமது நல்ல அதிஷ்டமே முனிவர்களின் கூட்டுறவை நாம் பெறுவதற்கு அடிகோலி, அதனால் பயன் எய்தும்படி செய்கிறது என்பது பொதுவான நியதியாகும்.  இந்நியதியின் விளக்கமாக ஹேமத்பந்த் தமது சொந்த நிகழ்ச்சியை எடுத்துக் காண்பிக்கிறார்.  பம்பாயின் புறநகர்ப்பகுதியான பாந்த்ராவில் பல ஆண்டுகளாக அவர் ரெஸிடெண்ட் மாஜிஸ்ட்ரேட்டாக இருந்தார்.  

பீர் மௌலானா என்னும் பெயருடைய புகழ்பெற்ற முஹமதிய முனிவர் ஒருவர் அங்கு வசித்து வந்தார்.  பல இந்துக்கள், பார்ஸியர்கள், மற்றும் பல மதத்தினரும் அவரிடம் சென்று தரிசனம் பெறுவது வழக்கம்.  இனூஸ் என்ற பெயர்கொண்ட அவருடைய முஜாவர்(பூசாரி) இரவும், பகலும் பலமுறை அவரைச் சென்று தரிசிக்கும்படி ஹேமத்பந்தை வற்புறுத்தி வந்தார்.  ஆனால் என்ன காரணத்தாலோ அவரால் பீர் மௌலானாவைத் தரிசிக்க முடியவில்லை.  பல ஆண்டுகட்குப் பிறகு அவருடைய முறை வந்தது.  ஷீர்டிக்கு அவர் அழைக்கப்பட்டார்.  அவர் அங்கேயே சாயிபாபாவின் தர்பாரில் நிரந்தரமாகச் சேர்க்கப்பட்டார்.  துரதிஷ்டம் உள்ளவர்கள், முனிவர்களின் தொடர்பை இப்படிப் பெறுவதில்லை.  அதிஷ்டசாலிகள் மட்டுமே அதைப் பெறுகிறார்கள்.

ஸ்ரீ ஸாயியைப்  பணிக அனைவருக்கும் சாந்தி நிலவட்டும்.
                                                                                                 (தொடரும்…)

No comments :

Post a Comment