Wednesday, 8 March 2023

ஸ்ரீஸாயி சரித்திரம் - அத்யாயம் 21 - பகுதி 2

No comments

முனிவர்களின் நிறுவனங்கள்:-

நினைவுக்கும் எட்டாத பழங்காலத்திலிருந்து இவ்வுலகில் முனிவர்களுடைய நிறுவனங்கள் (ஆச்சிரமங்கள்) இருந்துவருகின்றன.  வெவ்வேறு முனிவர்கள் வெவ்வேறு இடங்களில் தம்மைத் தாம் தோற்றுவித்துக்கொண்டு (அவதரித்து) தங்களுக்காக ஒதுக்கபட்ட பணித்திட்டங்களை நிறைவேற்றுகிறார்கள்.  வெவ்வேறு இடங்களில் செயலாற்றியபோதும் அவர்கள் அனைவரும் ஒருவரேயாவர்.  

அனைத்தும் வல்ல பரம்பொருள் என்கின்ற பொதுவான ஆணையுரிமையின் கீழ் அவர்கள் அனைவரும் ஒத்தியையுடன் செயல்படுகிறார்கள்.  அவர்கள் ஒவ்வொருவருக்கும் மற்றவர்கள் தத்தம் இடங்களில் என்ன செய்துகொண்டிருக்கிறார்கள் என்பது நன்றாகவே தெரியும்.  தேவைகள் ஏற்படும்போது பிறிதொருவரின் வேலையை நிறைவு செய்கிறார்கள். 

ஸ்ரீ ஸாயியைப்  பணிக அனைவருக்கும் சாந்தி நிலவட்டும்.

                                                                                                  (தொடரும்…)

No comments :

Post a Comment