ஹேமத்பந்த் (தேளும் பாம்பும்):-
(1) பாபாவின் பரிந்துரையின் பேரில் காகா சாஹேப் தீஷித் தினந்தோறும் ஏக்நாத் மஹராஜின் இரண்டு நூல்களைப் பாராயணம் செய்துவந்தார். அதாவது பாகவதமும், பாவார்த்த ராமாயணமுமாகும். அவைகள் பாராயணம் செய்யப்படும்போது கேட்டுக்கொண்டிருந்த நல்லதிஷ்டம் பெற்ற மக்களில் ஹேமத்பந்தும் ஒருவராவார். தமது தாயாரின் அறிவுரையின்படி ஹனுமான் ராமரின் பெருமையைச் சோதிக்கும் கட்டம் படிக்கப்பட்டபோது அனைவரும் மந்திரத்துக்குக் கட்டுப்படவர்கள் போன்று கேட்பதில் மூழ்கியிருந்தனர்.
ஹேமத்பந்தும் அவர்களுள் ஒருவர். அப்போது ஒரு பெரிய தேள் (அது எங்கிருந்து வந்ததென்று யாரும் அறியவில்லை) ஹேமத்பந்தின் வலது தோள் மீதிருந்த துண்டின்மீது தாவியது. முதலில் அது கவனிக்கப்படவில்லை. ஆனால் கடவுள் தமது கதைகளை ஆர்வத்துடன் கேட்பவர்களைப் பாதுகாக்கிறார். எனவே ஹேமத்பந்த் தற்செயலாகத் திரும்பியபோது பெரிய தேளைத் தோள்மீது கண்டார். அது மரண அமைதியுடன் இருந்தது. இப்பக்கமோ, அப்பக்கமோ சிறிதும் அசையவில்லை. அதுவும் பாராயணத்தைக் கேட்டு மகிழ்வது போன்றே தோன்றியது. பின்னர் ஹேமத்பந்த் கடவுளருளால், அவையோரைத் தொந்தரவு செய்யாமல் வேட்டியின் இரு முனைகளையும் எடுத்துத் தேளை உள்ளே மடித்துக்கொண்டார். பின்னர் வெளியேசென்று அதைத் தோட்டத்தில் எறிந்தார்.
(2) மற்றுமொரு சந்தப்பத்தின்போது ஒருநாள் சிலர் காகா சாஹேப் வாதாவின் மாடியில் அந்தி சாய்வதற்குச் சிறிதே முன்பாக உட்கார்ந்துகொண்டு இருந்தனர். அப்போது ஒரு பாம்பு ஜன்னல் நிலையிலுள்ள துவாரத்தின் வழியாக ஊர்ந்து வந்து சுருட்டிக்கொண்டு அமர்ந்தது. விளக்கு ஒன்று கொண்டுவரப்பட்டது. முதலில் அது மிரட்சி அடைந்தபோதும் அமைதியாக அமர்ந்து தலையை மேலும் கீழும் அசைத்துக் கொண்டிருந்தது. பின்னர் பலர் கம்புகளுடனும், தடிகளுடனும் ஓடி வந்தனர். அது ஒரு இடக்குமுடக்கான இடத்தில் அமர்ந்துகொண்டு இருந்தமையால், ஒரு அடியும் அதன்மீது படவில்லை. மனிதர்களின் சப்தங்களைக் கேட்டு பாம்பு தான் வந்த துவாரம் வழியாகவே விரைவாகத் திருபிச் சென்றுவிட்டது. பின்னர் அங்கிருந்த அனைவரும் கவலையை விடுத்தனர்.
ஸ்ரீ ஸாயியைப் பணிக அனைவருக்கும் சாந்தி நிலவட்டும்.
(தொடரும்…)
No comments :
Post a Comment