ஹேமத்பந்த் அடியவர்களைப் பாகுபடுத்துவதுடன் இந்த அத்தியாயத்தை முடிக்கிறார். மூன்று விதமானவர்கள் இருப்பதாக அவர் கூறுகிறார்.
(1) முதல் தரம் அல்லது சிறந்தவர்கள்
(2) இரண்டாம் தரம் அல்லது நடுவானவர்கள்
(3) மூன்றாம் தரம் அல்லது சாதாரணமானவர்கள்
முதல் தரமானவர்கள் குரு என்ன விரும்புகிறார் என்பதை ஊகித்தறிந்து அதை உடனே நிறைவேற்றி அவர்களிடமிருந்து உத்தரவு வரும்வரை காத்திராமல் அவர்களுக்குச் சேவை செய்கிறார்கள்.
இரண்டாம் தரமானவர்கள் தங்களது குருவின் கட்டளையை அட்சர சுத்தமாக சிறிதும் தாமதமின்றிக் கீழ்ப்படிகிறார்கள்.
மூன்றாம் தரமானவர்களோ குருவின் கட்டளையை நிறைவேற்றுதலை ஒத்திப்போட்டுக்கொண்டும், ஒவ்வொரு படியிலும் தவறு செய்துகொண்டும் இருக்கிறார்கள்.
அறிவுக்கூர்மையைப் பின்னணியாகக்கொண்ட உறுதியான நம்பிக்கையைச் சீடர்கள் பெற்றிருக்க வேண்டும். பொறுமையும் இவைகளுடன் சேருமானால் ஆன்மீக இலட்சியம் தொலைவில் இல்லை. மூச்சுக் கட்டுப்பாடு (உள் மூச்சு - வெளி மூச்சு) அல்லது ஹடயோகம் அல்லது பிற கடினப் பயிற்ச்சிகள் தேவையே இல்லை. மேலே குறிப்பிடப்பட்ட குணாதிசயங்களை அடியவர்கள் பெறுவார்களேயானால் இன்னும் அதிகமான செயல் திட்டங்களுக்கு அவர்கள் தயாராகின்றார்கள். பின்னர் குருமார்கள் தோன்றி ஆன்மீக பாதையின் முழுநிறைவுக்கு அவர்களை வழிநடத்துகிறார்கள்.
அடுத்த அத்தியாயத்தில் நாம் பாபாவின் விறுவிறுப்பான நகைச்சுவையையும், தமாஷையும் காண்போம்.
ஸ்ரீ ஸாயியைப் பணிக அனைவருக்கும் சாந்தி நிலவட்டும்.
(தொடரும்…)

No comments :
Post a Comment